திங்கள், 28 பிப்ரவரி, 2022

கணவன், மனைவி பிரச்சினையை உப்புத்தண்ணி எப்படி தீர்த்து வைக்கும் தெரியுமா?

சக்தி வாய்ந்த எளிய பரிகாரம் சாதாரண விஷயங்கள் மிகப்பெரிய சக்தி படைத்தவையாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு எலுமிச்சை கனி தேவ கனியாக இந்த பூலோகத்தில் பிறந்து செயல்படுவதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் அதை நல்ல விஷயத்திற்கும், தாந்த்ரீக விஷயங்களுக்கும் கூட இன்றளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் இந்த கல்லுப்பு எப்படி கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை, சச்சரவுகளை தீர்த்து வைக்கும்?
இதன் பின்னணியில் இருக்கும் சூட்சமம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் எப்போதாவது பிரச்சினை இருந்தால் பரவாயில்லை, பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் எடுத்ததற்கெல்லாம் சண்டை, எடுத்ததற்கெல்லாம் கோபம், வெறுப்பு என்று போய்க் கொண்டிருந்தால் அந்த குடும்பத்தில் நிம்மதி என்பது இல்லாமல் போய் விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மனைவி என்பவள் கணவனை மட்டும் அனுசரித்து சென்றால் போதும்
 என்று நினைக்கிறாள்.
ஆனால் கணவன் என்பவன் தன்னாலே பிறந்து உருவாகி வளர்ந்தவரல்ல.குடும்பமாக இருக்கும் பொழுது தான் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமும் இருக்கும் எனவே எல்லோரையும் அனுசரித்து தான் போக வேண்டும். அதே போல் தான் கணவனும், மனைவியை மட்டும் அனுசரித்து சென்றால் போதும் என்று நினைக்கக்கூடாது. சுற்றி இருக்கும் மற்றவர்களையும் சேர்த்து அனுசரித்துச் செல்ல வேண்டும்.நீ தான் சண்டைக்கு காரணம், நீயே தான் முடித்து வைக்க வேண்டும் என்று ஈகோவை கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தால் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும்.
யாராவது ஒருத்தர் இறங்கி போவதால் குறைந்து 
விடப் போவதில்லை. பிற்காலத்தில் எனக்காக
 எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறார் என்று உங்கள் துணை உங்கள் மீது இருக்கும் மரியாதையை அதிகரித்துக் கொண்டு விடுவார்
. இதனால் பாசமும், காதலும் அங்கு அதிகரிக்கும். எனவே யார் விட்டுக் கொடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி சிந்திக்காமல் உங்கள் கோபம் தீர்ந்து விட்டால் நீங்களே விட்டுக் கொடுத்து 
விடுவது நல்லது.
கணவன், மனைவி பிரச்சினைக்கு வாஸ்து குறைபாடுகள் காரணமாக இருக்கின்றது. வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள், தீய சக்திகள் உங்கள் மனதை கட்டுப்படுத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் எனவே இத்தகைய எதிர்மறை ஆற்றல்களை துரத்தி அடிக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் கொஞ்சம் கல் உப்பை பித்தளை அல்லது செம்பு அல்லது கண்ணாடி டம்ளர் ஏதாவது ஒன்றில் கரைத்துக் கொள்ளுங்கள்.
இதை அப்படியே கொண்டு போய் கணவன், மனைவி படுக்கும் அறையில் அவர்களது படுக்கைக்கு பக்கத்தில் வைத்து விட்டால் போதும். யாரும் கீழே கொட்டி விடாதபடி பாதுகாப்பான இடத்தில் வையுங்கள். மறுநாள் காலையில் இந்த தண்ணீரைக் சிங்கிள் அல்லது வெளியில் ஊற்றிவிட்டு மீண்டும் அதே போல் அன்று இரவு செய்ய வேண்டும். இது போல் தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் கொஞ்சம் கல் உப்பை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொண்டால் போதும், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அதை 
கிரகித்துக் கொள்ளும்.
இதனால் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் குறைய ஆரம்பிக்கும். மேலும் அடிக்கடி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சிவ வழிபாடு செய்து வர ஓருடல் ஈருயிராய் ஒருமித்த தம்பதிகளாக வாழ நல்ல எண்ணம் தோன்றும். வேலை முடித்து வீட்டிற்கு வந்து விட்டாலே இருவரும் கொஞ்ச நேரமாவது மனம் விட்டு பேசிக் கொள்ள வேண்டும். எப்போது பார்த்தாலும் மொபைல்போன், லேப்டாப் என்று நோண்டிக் கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் திசை திரும்பி விடும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
0 கருத்துகள்:

கருத்துரையிடுக