மருத்துவச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூன், 2022

உங்கள் கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கும் ஊறவைத்த அரிசி

அரிசியை ஊறவைத்த நீரை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள்
 குறித்து பார்ப்போம்.
சமைப்பதற்கு அரிசியை ஊறவைத்த நீரை பெரும்பாலும் யாரும் உபயோகப்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். முடி உதிர்தல், முடி உலர்வடைதல், முடி மெலிதல், பொடுகு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் 
தீர்வு காணலாம்.
அரிசி நீரில் சேதமடைந்த தலைமுடியை சரிசெய்யும் கார்போஹைட்ரேட் இனோசிட்டால் இருப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. முடியின் வேர்களை வலுப்படுத்தும், முடியின் நீளத்தை அதிகரித்து கூந்தலை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும் அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் 
குறித்து பார்ப்போம்.
1. அரிசி நீர்-வெங்காய சாறு:
இந்த கலவை முடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தில் போலிக் அமிலம், சல்பர் மற்றும் வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. அவை முடி உடைவது, முடி மெலிவதை குறைக்கவும் உதவும்.
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் ஊற்றி அதில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அரிசியை வடிகட்டிவிட்டு அந்த நீரை மட்டும் பிரிட்ஜில் குளிர வைக்கவும். ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்
 அதனை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். பின்பு அரிசி ஊறவைத்த நீரில் வெங்காய சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு
 உச்சந்தலை உள்பட தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை 
அலசி விடலாம். வெங்காய வாசனையை போக்குவதற்கு ஷாம்பு பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. அரிசி நீர் - கிரீன் டீ:
இந்த கலவையில் கண்டிஷனிங் பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தலைமுடியை 
மென்மையாக்கும்.
செய்முறை: அரிசியை ஊறவைத்து ஒரு கப் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு கிரீன் டீ பேக்கை போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரிசி நீரை சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.
3. அரிசிநீர்-தேன்:
அரிசி நீரில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி சேதத்தை சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியவை. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியவை. தேன், கூந்தல் முடியை மென்மையாக்கக்கூடியது. முடி உடைவதையும் குறைக்கக்கூடியது.
செய்முறை: இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் 
தேன் கலந்து நன்கு கிளறவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த 
கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது. வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம்.
4. அரிசி நீர்-ஆரஞ்சு தோல்:
பொடுகு தொல்லையை போக்குவது, அதிகப்படியான எண்ணெய் தன்மையை குறைப்பது என ஆரஞ்சு தோல், தலைமுடிக்கு பல வகைகளில் நன்மை களை வழங்கக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவு வைட்டமின் சி மட்டுமின்றி, பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இந்த கலவை அரிசி நீருடன் சேர்ந்து முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். பளபளப்பான, நீண்ட மற்றும் அடர்த்தியான முடி 
வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஆரஞ்சு பழ தோலை சேர்க்கவும். ஜாடியை சூரிய ஒளி படாத இடத்திலோ, குளிர்ச்சியான இடத்திலோ வைத்துக்கொள்ளவும். இந்த நீர் கலவையை உச்சந் தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம்
 நல்ல மாற்றத்தை உணரலாம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




வெள்ளி, 26 செப்டம்பர், 2014

கண் பார்வை குறைபாடு நீங்க நல்லெண்ணெய் மருத்துவம்

நல்லெண்ணையில் சிறிதளவு மிளகு சேர்த்து ஒருவாரம் வெயிலில் வைத்து பின்னர் அந்த எண்ணெய்யை தலை முழுகும் முன் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கும்.

உடலை வலுவாக்கும் மாதுளை பூ

 எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு வருவது மாதுளை பழம் தான். நாம் உண்னும் மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை கொண்டுள்ளது. இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மாதுளம் பூ மிகச் சிறந்த மருந்து பொருள்.
உலர்ந்த மாதுளைப்பூவை முப்பது கிராம் எடுத்து சேகரித்து பதினைந்து கிராம் வேலம் பிசின், மூடுன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும் சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்றிமணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும். உலர்ந்த மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்தினால் உடனே குணம் தெரியும்.
உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே முறையில் கொடுக்க குணம் தெரியும். சீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து கொள்ள வேண்டும். இதனை இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.
ஆரோக்கியமான உடல் நலம் பெற விரும்புபவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து ஆரோக்கிய உடல் கிடைக்கும். சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல் காணப்படும். பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வாயுக்கள் சீற்றம் குறையும்.

கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். மாதவிலக்கு நிற்கும் காலமான மொனோபாஸ் காலத்தில்பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்கும். அதுபோல வெள்ளை படுதலும் குணமாகும்