திங்கள், 28 பிப்ரவரி, 2022

கணவன், மனைவி பிரச்சினையை உப்புத்தண்ணி எப்படி தீர்த்து வைக்கும் தெரியுமா?

சக்தி வாய்ந்த எளிய பரிகாரம் சாதாரண விஷயங்கள் மிகப்பெரிய சக்தி படைத்தவையாக இருக்கும். உதாரணத்திற்கு ஒரு எலுமிச்சை கனி தேவ கனியாக இந்த பூலோகத்தில் பிறந்து செயல்படுவதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அதனால் தான் அதை நல்ல விஷயத்திற்கும், தாந்த்ரீக விஷயங்களுக்கும் கூட இன்றளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் மகாலட்சுமியின் அம்சமாக இருக்கும் இந்த கல்லுப்பு எப்படி கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டை, சச்சரவுகளை தீர்த்து வைக்கும்?
இதன் பின்னணியில் இருக்கும் சூட்சமம் என்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் எப்போதாவது பிரச்சினை இருந்தால் பரவாயில்லை, பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் எடுத்ததற்கெல்லாம் சண்டை, எடுத்ததற்கெல்லாம் கோபம், வெறுப்பு என்று போய்க் கொண்டிருந்தால் அந்த குடும்பத்தில் நிம்மதி என்பது இல்லாமல் போய் விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. மனைவி என்பவள் கணவனை மட்டும் அனுசரித்து சென்றால் போதும்
 என்று நினைக்கிறாள்.
ஆனால் கணவன் என்பவன் தன்னாலே பிறந்து உருவாகி வளர்ந்தவரல்ல.குடும்பமாக இருக்கும் பொழுது தான் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தமும் இருக்கும் எனவே எல்லோரையும் அனுசரித்து தான் போக வேண்டும். அதே போல் தான் கணவனும், மனைவியை மட்டும் அனுசரித்து சென்றால் போதும் என்று நினைக்கக்கூடாது. சுற்றி இருக்கும் மற்றவர்களையும் சேர்த்து அனுசரித்துச் செல்ல வேண்டும்.நீ தான் சண்டைக்கு காரணம், நீயே தான் முடித்து வைக்க வேண்டும் என்று ஈகோவை கட்டிப் பிடித்து அழுது கொண்டிருந்தால் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும்.
யாராவது ஒருத்தர் இறங்கி போவதால் குறைந்து 
விடப் போவதில்லை. பிற்காலத்தில் எனக்காக
 எவ்வளவோ விட்டுக் கொடுத்திருக்கிறார் என்று உங்கள் துணை உங்கள் மீது இருக்கும் மரியாதையை அதிகரித்துக் கொண்டு விடுவார்
. இதனால் பாசமும், காதலும் அங்கு அதிகரிக்கும். எனவே யார் விட்டுக் கொடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி சிந்திக்காமல் உங்கள் கோபம் தீர்ந்து விட்டால் நீங்களே விட்டுக் கொடுத்து 
விடுவது நல்லது.
கணவன், மனைவி பிரச்சினைக்கு வாஸ்து குறைபாடுகள் காரணமாக இருக்கின்றது. வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள், தீய சக்திகள் உங்கள் மனதை கட்டுப்படுத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் எனவே இத்தகைய எதிர்மறை ஆற்றல்களை துரத்தி அடிக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் கொஞ்சம் கல் உப்பை பித்தளை அல்லது செம்பு அல்லது கண்ணாடி டம்ளர் ஏதாவது ஒன்றில் கரைத்துக் கொள்ளுங்கள்.
இதை அப்படியே கொண்டு போய் கணவன், மனைவி படுக்கும் அறையில் அவர்களது படுக்கைக்கு பக்கத்தில் வைத்து விட்டால் போதும். யாரும் கீழே கொட்டி விடாதபடி பாதுகாப்பான இடத்தில் வையுங்கள். மறுநாள் காலையில் இந்த தண்ணீரைக் சிங்கிள் அல்லது வெளியில் ஊற்றிவிட்டு மீண்டும் அதே போல் அன்று இரவு செய்ய வேண்டும். இது போல் தொடர்ந்து ஒவ்வொரு இரவிலும் கொஞ்சம் கல் உப்பை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொண்டால் போதும், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அதை 
கிரகித்துக் கொள்ளும்.
இதனால் குடும்பத்தில் இருக்கும் சண்டை, சச்சரவுகள் குறைய ஆரம்பிக்கும். மேலும் அடிக்கடி கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சிவ வழிபாடு செய்து வர ஓருடல் ஈருயிராய் ஒருமித்த தம்பதிகளாக வாழ நல்ல எண்ணம் தோன்றும். வேலை முடித்து வீட்டிற்கு வந்து விட்டாலே இருவரும் கொஞ்ச நேரமாவது மனம் விட்டு பேசிக் கொள்ள வேண்டும். எப்போது பார்த்தாலும் மொபைல்போன், லேப்டாப் என்று நோண்டிக் கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் திசை திரும்பி விடும் என்பதை மனதில் கொண்டு செயல்படுவது நல்லது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

உங்கள் வரவேற்பறையில் இந்த 3 இலைகளை ஒன்றாக சேர்த்து வைத்தால் நிம்மதி

நிறைய பணம் இருக்கிறது. ஆனால், மனதில் நிம்மதி இல்லை. நிறைய நகை துணிமணிகள் உள்ளது. ஆனால் மனதில் சந்தோஷம் இல்லை. பஞ்சு மெத்தை உள்ளது. ஆனால் கண்களில் நிம்மதியான உறக்கம் இல்லை. அறுசுவையோடு விதவிதமான பதார்த்தங்களுடன் சாப்பாடு தயாராக உள்ளது. ஆனால் நிம்மதியாக சாப்பிட, நல்ல பசி இல்லை. உடலில் ஆரோக்கியம் இல்லை. ஏன் இந்த பிரச்சனைகள் எல்லாம் நமக்கு வருகிறது. நம்முடைய வாழ்க்கையில் நேர்மையும் உண்மையும் இல்லாத காரணத்தினால், கர்மவினைகள் காரணத்தினாலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாக மனிதர்களுக்கு வரத்தான் செய்யும்.
இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், உங்களிடம் உள்ள செல்வத்தை இல்லாதவர்களுக்கு கொஞ்சம் தானம் கொடுங்கள். உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். உங்களிடம் இருக்கும் அறுசுவை உணவில், ஒரு சுவை உணவையாவது ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பவனுக்கு தானமாகக் கொடுங்கள். உங்களுக்கு நன்றாக பசி எடுக்கும். தங்கம் வைரம் வைடூரியம் என்ற பெட்டி நிறைய பணம் இருந்தால் அதில் ஒரு பங்கையாவது தான தர்ம காரியத்திற்கு செலவு செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய நிம்மதி உங்களை தேடி வரும். ஒரு ஏழை பெண்ணின் திருமண செலவை 
ஏற்றுக் கொள்ளலாம்.
சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைத்தவிர மனநிம்மதிக்கு வீட்டின் சந்தோஷத்திற்கு நம்மை சுற்றி நடக்கும் கெட்ட பலன்களை அழிப்பதற்கு என்ன செய்யலாம். ரொம்ப ரொம்ப சுலபமான வழி உள்ளது. ஒரு சிறிய டம்ளர் அல்லது பவுல் எது வேண்டுமென்றாலும் 
எடுத்துக்கொள்ளுங்கள். 
அதில் நல்ல தண்ணீரை நிரப்பி விட வேண்டும். அதன் உள்ளே 2 துளசி இலை, 2 வில்வ இலை, 2 வேப்ப இலைகளைப் போட்டு இதை அப்படியே உங்கள் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். இதே போல இன்னொரு எச்சில் படாத கிண்ணத்தில் தயார் செய்து பூஜை அறையிலும்
 வைக்கலாம்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த தண்ணீரையும் உள்ளே இருக்கும் பொருட்களையும் மாற்றினால் கூட போதும். உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். நிம்மதி சந்தோஷம் தூக்கம் பசி இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.நிறைய பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்குமா என்று கேட்டால். நிச்சயமாக இல்லை, சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் மக்களுக்கு கூட இப்படிப்பட்ட பிரச்சினைகள், மன நிம்மதியற்ற சூழ்நிலையை
 கொடுக்கின்றது.
இவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இவர்கள் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. மன குழப்பத்தில் இருந்து விடுபட, வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்க, இந்த மூன்று இலைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும். இதில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் கொடுத்து
 கொண்டே இருக்கும்.
இந்த 3 இலைகளை வைத்து விட்டால் எல்லாம் முடிந்ததா? எல்லாம் சரியாகிவிடுமா? என்ற எண்ணத்தோடு மட்டும் பரிகாரத்தை செய்ய வேண்டாம். முழு நம்பிக்கையோடு மூன்று இலைகளிலும், அந்த கடவுளுக்கு சமம் என்று நம்பியவர்களுக்கு, முழுமையான நிம்மதி கிடைப்பது உறுதி. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கை இல்லாமல் பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒருபோதும் 
பலன் இருக்காது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாம் பால் குடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா பால் குடிக்கும் முறை இதுதான்

நமது உடலுக்கு பால் மிகவும் ஆரோக்கியமான பானமாகும். அனைவரும் கண்டிப்பாக தினமும் ஒரு டம்ளர் பாலாவது குடிக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், பாலை குடிக்க சரியான முறை என்ன? இது குறித்த பல கேள்விகள் மக்கள் மனதில் எப்போதும் இருக்கும்.பாலை
 நின்றுக்கொண்டே குடிப்பதா, அல்லது அமர்ந்துதான் குடிக்க வேண்டுமா? என்ற சந்தேகம் மக்களுக்கு வருவதுண்டு. எந்த நிலையில் பாலை குடிக்க வேண்டும்? பாலை குறிப்பிட்ட நிலையில் குடித்தால் அது
உடலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இப்படிப்பட்ட கேள்விகளின் விடைகளை இந்த பதிவில் காணலாம்.பால் ஏதற்காக குடிக்க வேண்டும்? பால் உட்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன, இதில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.பாலில்
 இருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு 
மிகவும் நல்லது.பாலில் இருக்கும் வைட்டமின் ‘D’ இயற்கைக்கு 
மாறான செல் வளர்ச்சியைத் தடுக்கிறது, இதனால் புற்றுநோய் அபாயம் குறைகிறது.பால்
குடிப்பதால், மகிழ்ச்சியுடன் தொடர்புடைய செரோடோனின் என்ற ஹார்மோனின் சுரப்பு தூண்டப்படுகிறது. இது பதற்றத்தை குறைக்கிறது.
பால் உட்கொள்வதால், உடலுக்கு இயறையான கொழுப்பு கிடைக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனால்
 உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்காது.பாலை 
எவ்வாறு உட்கொள்ள வேண்டும்?பாலை உட்கார்ந்து குடிக்கக் 
கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் 
அமர்ந்த நிலை ஒரு ஸ்பீட்
பிரேக்கராக செயல்படுகிறது. ஆகையால், இப்படி செய்யும்போது, பால் உடலின் பல இடங்களில் மிக மெதுவாக பரவுகிறது.மாறாக நின்றுகொண்டு பால் குடிக்கும்போது, பாலுக்கு தேவையான நேரடி பாதை கிடைக்கிறது. இதன் காரணமாக அது எளிதில் உறிஞ்சப்பட்டு உடலின் அனைத்து பாகங்களும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன.பாலை உட்கார்ந்து குடித்தால் என்ன நிகழும்?உட்கார்ந்து பால் குடிக்கும் போது, ​​இந்த திரவத்தின் ஓட்டம் தடைப்பட்டு, உணவுக்குழாயின் கீழ் 
பகுதியில் தங்கிவிடும்.
நீண்ட காலத்துக்கு இப்படி நடந்தால், Gastroesophageal Reflux Syndrome போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது பொதுவாக GERD என்று அழைக்கப்படுகிறது.பாலை உட்கார்ந்து குடிக்க வேண்டிய நிலை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?உட்கார்ந்து பால் குடிக்க 
வேண்டிய கட்டாயம் இருந்தால், பாலை அவசர அவசரமாக குடிப்பதை தவிர்க்கவும். உங்கள் வயிற்றில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க சிறிது சிறிதாக குடிக்கவும். இப்படி செய்தால், 
வயிற்றுவலி வராது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>
திங்கள், 6 செப்டம்பர், 2021

இலங்கையரால் கண்டுபிடிப்பு.சில நிமிடங்களில் கொரோனா வைரஸை அழிக்கும் இயந்திரம்

கொரோனா வைரஸை 6 – 8 நிமிடங்களில் அழிக்கும் இயந்திரம்; இலங்கையரால் கண்டுபிடிப்பு.பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக
 உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளார்
காற்றிலுள்ள வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை சில நொடிகளில் அழிக்கும் அதிவேக (virus air burnable automatic machine) தானியங்கி இயந்திரம் மற்றும் பணம், ஆவணங்களில் காணப்படும் வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை அழிக்கும் தானியங்கி கிருமித்தொற்று நீக்கிக் கருவி ஆகியவை அவரது கண்டுபிடிப்புகளில் அடங்குகின்றன.
பொரளை சுசமவர்தன மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்ற இவர், கொழும்புப் பகுதியில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் மோட்டார் பொறியியல் பயின்றார். பின்னர் ஜப்பான் சென்று மோட்டார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தைக் கற்றுள்ளார்.மலேசியாவிலும் இயந்திரப் பிரிவில் இவர் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த இளைஞனுக்கு இந்த இணையம் சார்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>
வெள்ளி, 7 மே, 2021

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

முதலாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் 
ஒரு எண்
உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள்
 A,I,J,Q,Yஆகியவை.
குண அமைப்பு 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் 
நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் 
அளிப்பார்கள்.
வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை 
மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும்
 இருப்பர்.
 முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.
தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் 
கூடியவர்கள்.
இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, 
அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம்
 கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
உடல் அமைப்பு ஆரோக்கியம் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான
 பலவீனம் இருக்கும்.
கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் 
சாப்பிடுவது நல்லது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 19 அக்டோபர், 2016

முழங்கால் மற்றும் மூட்டு வலியைப் போக்க, இதோ ஒரு டம்ளர் குடிஙயுங்க !…

இன்றைய காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் ஏராமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். உடலைத் தாங்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், நகரவோ, அசையவோ முடியாமல் பெரும் பிரச்சனையை அனுபவிக்கக்கூடும்.
அதிலும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உராய்வு நீக்கிப் பொருளின் உற்பத்தி குறைந்து, முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள தசைநார்களில் உட்காயங்கள் ஏற்பட்டு, வலிமையை இழக்கின்றன.
இப்படி வலிமையிழந்துள்ள எலும்புகள் மற்றும் தசைநார்களை வலிமைப்படுத்துவதில் உணவுகளும் பானங்களும் பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும்.
உராய்வு நீக்கி
இயற்கையாக எலும்பு மூட்டுகளில் உராய்வு நீக்கிப் பொருள் உற்பத்தி செய்யப்படும். ஆனால் வயது அதிகரிக்கும் போது அது குறையும். எனவே ஒருவருக்கு வயது அதிகமாகும் போது, எலும்புகளின் மீது சற்று அக்கறை காட்ட வேண்டும். இதனால் வயதான காலத்தில் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
நேச்சுரல் ஸ்மூத்தி
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்மூத்தி மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இந்த ஸ்மூத்தியில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உட்பொருட்கள், அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டது. இதனால் மூட்டுகளில் உள்ள உட்காயங்கள் குணமாகி, மூட்டு வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சத்துக்கள்
முக்கியமாக இந்த ஸ்மூத்தியில் வைட்டமின் சி, புரோமிலைன், சிலிகான் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் வலிமையை வழங்கி, உடலை ஆற்றலுடன் செயல்படச் செய்யும். சரி, இப்போது அந்த ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
பட்டை – 1/2 டீஸ்பூன்
அன்னாசி துண்டுகள் – 2 கப்
ஓட்ஸ் – 1 கப்
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
நறுக்கிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
முதலில் ஓட்ஸை சுடுநீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு தேன், பட்டைத் தூள், தண்ணீர், பாதாம், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அன்னாசி சாறு மற்றும் வேக வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து நன்கு அரைத்து, டம்ளரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பருக வேண்டும்.
பருகும் முறை:
இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், 5 நாட்களில் மூட்டுகளில் இருந்த பிரச்சனையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த பானத்தை தொடர்ந்து 2 வாரம் குடிகுடிக்கவும் ......
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நாம் தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள் தெரியுமா?


உடலை ஆரோக்கியமாக காக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடி தேடி காய்கறிகள், பழங்களை சாப்பிடுவார்கள். அவ்வாறெனில்
 நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் பலப்படுத்திட நட்ஸ் சாப்பிடுகிறீர்களா? பாதாம், முந்திரி,
 வால் நட், வேர்க்கடலை ஆகியவை அற்புத சத்துக்களையும் அதிசய பண்புகளையும் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக வால் நட் சாப்பிடுவது விசேஷமானது. வால் நட் காஸ்ட்லிதான். 
ஆனால் நீங்கள் சாப்பிடும் பீஸாவை விட விலை குறைவு தினமும் 5 வால் நட் சாப்பிடுங்கள். 4 மணி நேரத்திற்கு பிறகு 
என்ன நடக்கும் தெரியுமா?
வால் நட்டின் சத்துக்கள் : முதலில் அதன் நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன் அதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒமேகா-3, நிறைவுறா கொழுப்பு அமிலம், விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை உள்ளன. உடலுக்கு தேவையான மிக முக்கியமான மினரல் அனைத்தும் வால்நட் கொண்டுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>