திங்கள், 6 செப்டம்பர், 2021

இலங்கையரால் கண்டுபிடிப்பு.சில நிமிடங்களில் கொரோனா வைரஸை அழிக்கும் இயந்திரம்

கொரோனா வைரஸை 6 – 8 நிமிடங்களில் அழிக்கும் இயந்திரம்; இலங்கையரால் கண்டுபிடிப்பு.பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக
 உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளார்
காற்றிலுள்ள வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை சில நொடிகளில் அழிக்கும் அதிவேக (virus air burnable automatic machine) தானியங்கி இயந்திரம் மற்றும் பணம், ஆவணங்களில் காணப்படும் வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை அழிக்கும் தானியங்கி கிருமித்தொற்று நீக்கிக் கருவி ஆகியவை அவரது கண்டுபிடிப்புகளில் அடங்குகின்றன.
பொரளை சுசமவர்தன மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்ற இவர், கொழும்புப் பகுதியில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் மோட்டார் பொறியியல் பயின்றார். பின்னர் ஜப்பான் சென்று மோட்டார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தைக் கற்றுள்ளார்.மலேசியாவிலும் இயந்திரப் பிரிவில் இவர் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த இளைஞனுக்கு இந்த இணையம் சார்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>