வியாழன், 9 ஜூன், 2022

உங்கள் கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கும் ஊறவைத்த அரிசி

அரிசியை ஊறவைத்த நீரை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள்
 குறித்து பார்ப்போம்.
சமைப்பதற்கு அரிசியை ஊறவைத்த நீரை பெரும்பாலும் யாரும் உபயோகப்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். முடி உதிர்தல், முடி உலர்வடைதல், முடி மெலிதல், பொடுகு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் 
தீர்வு காணலாம்.
அரிசி நீரில் சேதமடைந்த தலைமுடியை சரிசெய்யும் கார்போஹைட்ரேட் இனோசிட்டால் இருப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. முடியின் வேர்களை வலுப்படுத்தும், முடியின் நீளத்தை அதிகரித்து கூந்தலை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும் அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் 
குறித்து பார்ப்போம்.
1. அரிசி நீர்-வெங்காய சாறு:
இந்த கலவை முடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தில் போலிக் அமிலம், சல்பர் மற்றும் வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. அவை முடி உடைவது, முடி மெலிவதை குறைக்கவும் உதவும்.
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் ஊற்றி அதில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அரிசியை வடிகட்டிவிட்டு அந்த நீரை மட்டும் பிரிட்ஜில் குளிர வைக்கவும். ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்
 அதனை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். பின்பு அரிசி ஊறவைத்த நீரில் வெங்காய சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு
 உச்சந்தலை உள்பட தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை 
அலசி விடலாம். வெங்காய வாசனையை போக்குவதற்கு ஷாம்பு பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. அரிசி நீர் - கிரீன் டீ:
இந்த கலவையில் கண்டிஷனிங் பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தலைமுடியை 
மென்மையாக்கும்.
செய்முறை: அரிசியை ஊறவைத்து ஒரு கப் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு கிரீன் டீ பேக்கை போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரிசி நீரை சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.
3. அரிசிநீர்-தேன்:
அரிசி நீரில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி சேதத்தை சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியவை. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியவை. தேன், கூந்தல் முடியை மென்மையாக்கக்கூடியது. முடி உடைவதையும் குறைக்கக்கூடியது.
செய்முறை: இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் 
தேன் கலந்து நன்கு கிளறவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த 
கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது. வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம்.
4. அரிசி நீர்-ஆரஞ்சு தோல்:
பொடுகு தொல்லையை போக்குவது, அதிகப்படியான எண்ணெய் தன்மையை குறைப்பது என ஆரஞ்சு தோல், தலைமுடிக்கு பல வகைகளில் நன்மை களை வழங்கக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவு வைட்டமின் சி மட்டுமின்றி, பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இந்த கலவை அரிசி நீருடன் சேர்ந்து முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். பளபளப்பான, நீண்ட மற்றும் அடர்த்தியான முடி 
வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஆரஞ்சு பழ தோலை சேர்க்கவும். ஜாடியை சூரிய ஒளி படாத இடத்திலோ, குளிர்ச்சியான இடத்திலோ வைத்துக்கொள்ளவும். இந்த நீர் கலவையை உச்சந் தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம்
 நல்ல மாற்றத்தை உணரலாம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
புதன், 1 ஜூன், 2022

பல நோய்களுக்குமான ஒரேயொரு சொட்டு மருந்து சர்வரோக நிவாரணி

நமது உடலிலுள்ள நச்சுத்தன்மைகளை நீக்கி நாம் அன்றாடம் நோய்நொடிகளின்றி சுறுசுறுப்பாக இயங்க அனைவருக்குமான ஒரேயொரு சொட்டு மருந்து ரூட் தயாரிப்புக்கள். இது ஒரு 
சர்வரோக நிவாரணி.
 நச்சு நீக்கம்: செல்கள், உடல் மற்றும் மூளை திசுக்களில் இருந்து நச்சுகளை அகற்றுவதை பாதுகாப்பாக ஆதரிக்கிறது.
வீக்கம்: பிரச்சினைகளின் மூல காரணத்தை அகற்றுவதன் மூலம் எதிர்மறை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
உறிஞ்சுதல்: ஊட்டச்சத்து பிணைப்பு தளங்களைத் தடுக்கக்கூடிய நச்சுகளை அகற்றுவதன் மூலம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை 
ஆதரிக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது: பொது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கிறது.
உள்ளடக்கம்: 1 oz.(30 mL) பாட்டில் - 600 சொட்டுகள் உள்ளன
தேவையான பொருட்கள்: உயிர் கிடைக்கும் சிலிக்கா (கிளினோப்டிலோலைட்டில் இருந்து ஆர்த்தோசிலிசிக் அமிலம்), வைட்டமின் சி மற்றும் தாதுக்கள்.
Clean Slate எடுப்பது எப்படி:
• வாய்வழியாக அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
• முதல் இரண்டு நாட்களுக்கு தினமும் இரண்டு முறை 1-2 ஒற்றை சொட்டுகளை மெதுவாகத் தொடங்குங்கள்.
• தினமும் இரண்டு முறை 3-4 சொட்டுகளாக அதிகரிக்கவும், பரிந்துரைக்கப்பட்ட டோஸ் 10 ஒற்றை சொட்டுகளை தினமும் இருமுறை அதிகரிக்கவும்.
• நச்சு நீக்கம் சங்கடமானதாக இருந்தால், மருந்தின் அளவைக் குறைக்கவும்.
* நினைவில் கொள்ளுங்கள்:  Clean Slate எடுத்துக் கொள்ளும்போது, ​​உங்களை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய
 தண்ணீர் குடிக்கவும்.
இதை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் எப்படி எடுப்பது என்பன பற்றி மேலுமொரு ஆர்டிக்கலில் விரிவாக பார்க்கலாம். 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

உங்கள் வரவேற்பறையில் இந்த 3 இலைகளை ஒன்றாக சேர்த்து வைத்தால் நிம்மதி

நிறைய பணம் இருக்கிறது. ஆனால், மனதில் நிம்மதி இல்லை. நிறைய நகை துணிமணிகள் உள்ளது. ஆனால் மனதில் சந்தோஷம் இல்லை. பஞ்சு மெத்தை உள்ளது. ஆனால் கண்களில் நிம்மதியான உறக்கம் இல்லை. அறுசுவையோடு விதவிதமான பதார்த்தங்களுடன் சாப்பாடு தயாராக உள்ளது. ஆனால் நிம்மதியாக சாப்பிட, நல்ல பசி இல்லை. உடலில் ஆரோக்கியம் இல்லை. ஏன் இந்த பிரச்சனைகள் எல்லாம் நமக்கு வருகிறது. நம்முடைய வாழ்க்கையில் நேர்மையும் உண்மையும் இல்லாத காரணத்தினால், கர்மவினைகள் காரணத்தினாலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாக மனிதர்களுக்கு வரத்தான் செய்யும்.
இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், உங்களிடம் உள்ள செல்வத்தை இல்லாதவர்களுக்கு கொஞ்சம் தானம் கொடுங்கள். உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். உங்களிடம் இருக்கும் அறுசுவை உணவில், ஒரு சுவை உணவையாவது ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பவனுக்கு தானமாகக் கொடுங்கள். உங்களுக்கு நன்றாக பசி எடுக்கும். தங்கம் வைரம் வைடூரியம் என்ற பெட்டி நிறைய பணம் இருந்தால் அதில் ஒரு பங்கையாவது தான தர்ம காரியத்திற்கு செலவு செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய நிம்மதி உங்களை தேடி வரும். ஒரு ஏழை பெண்ணின் திருமண செலவை 
ஏற்றுக் கொள்ளலாம்.
சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைத்தவிர மனநிம்மதிக்கு வீட்டின் சந்தோஷத்திற்கு நம்மை சுற்றி நடக்கும் கெட்ட பலன்களை அழிப்பதற்கு என்ன செய்யலாம். ரொம்ப ரொம்ப சுலபமான வழி உள்ளது. ஒரு சிறிய டம்ளர் அல்லது பவுல் எது வேண்டுமென்றாலும் 
எடுத்துக்கொள்ளுங்கள். 
அதில் நல்ல தண்ணீரை நிரப்பி விட வேண்டும். அதன் உள்ளே 2 துளசி இலை, 2 வில்வ இலை, 2 வேப்ப இலைகளைப் போட்டு இதை அப்படியே உங்கள் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். இதே போல இன்னொரு எச்சில் படாத கிண்ணத்தில் தயார் செய்து பூஜை அறையிலும்
 வைக்கலாம்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த தண்ணீரையும் உள்ளே இருக்கும் பொருட்களையும் மாற்றினால் கூட போதும். உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். நிம்மதி சந்தோஷம் தூக்கம் பசி இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.நிறைய பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்குமா என்று கேட்டால். நிச்சயமாக இல்லை, சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் மக்களுக்கு கூட இப்படிப்பட்ட பிரச்சினைகள், மன நிம்மதியற்ற சூழ்நிலையை
 கொடுக்கின்றது.
இவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இவர்கள் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. மன குழப்பத்தில் இருந்து விடுபட, வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்க, இந்த மூன்று இலைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும். இதில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் கொடுத்து
 கொண்டே இருக்கும்.
இந்த 3 இலைகளை வைத்து விட்டால் எல்லாம் முடிந்ததா? எல்லாம் சரியாகிவிடுமா? என்ற எண்ணத்தோடு மட்டும் பரிகாரத்தை செய்ய வேண்டாம். முழு நம்பிக்கையோடு மூன்று இலைகளிலும், அந்த கடவுளுக்கு சமம் என்று நம்பியவர்களுக்கு, முழுமையான நிம்மதி கிடைப்பது உறுதி. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கை இல்லாமல் பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒருபோதும் 
பலன் இருக்காது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாம் பால் குடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா பால் குடிக்கும் முறை இதுதான்

நமது உடலுக்கு பால் மிகவும் ஆரோக்கியமான பானமாகும். அனைவரும் கண்டிப்பாக தினமும் ஒரு டம்ளர் பாலாவது குடிக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், பாலை குடிக்க சரியான முறை என்ன? இது குறித்த பல கேள்விகள் மக்கள் மனதில் எப்போதும் இருக்கும்.பாலை
 நின்றுக்கொண்டே குடிப்பதா, அல்லது அமர்ந்துதான் குடிக்க வேண்டுமா? என்ற சந்தேகம் மக்களுக்கு வருவதுண்டு. எந்த நிலையில் பாலை குடிக்க வேண்டும்? பாலை குறிப்பிட்ட நிலையில் குடித்தால் அது
உடலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இப்படிப்பட்ட கேள்விகளின் விடைகளை இந்த பதிவில் காணலாம்.பால் ஏதற்காக குடிக்க வேண்டும்? பால் உட்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன, இதில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.பாலில்
 இருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு 
மிகவும் நல்லது.பாலில் இருக்கும் வைட்டமின் ‘D’ இயற்கைக்கு 
மாறான செல் வளர்ச்சியைத் தடுக்கிறது, இதனால் புற்றுநோய் அபாயம் குறைகிறது.பால்
குடிப்பதால், மகிழ்ச்சியுடன் தொடர்புடைய செரோடோனின் என்ற ஹார்மோனின் சுரப்பு தூண்டப்படுகிறது. இது பதற்றத்தை குறைக்கிறது.
பால் உட்கொள்வதால், உடலுக்கு இயறையான கொழுப்பு கிடைக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனால்
 உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்காது.பாலை 
எவ்வாறு உட்கொள்ள வேண்டும்?பாலை உட்கார்ந்து குடிக்கக் 
கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் 
அமர்ந்த நிலை ஒரு ஸ்பீட்
பிரேக்கராக செயல்படுகிறது. ஆகையால், இப்படி செய்யும்போது, பால் உடலின் பல இடங்களில் மிக மெதுவாக பரவுகிறது.மாறாக நின்றுகொண்டு பால் குடிக்கும்போது, பாலுக்கு தேவையான நேரடி பாதை கிடைக்கிறது. இதன் காரணமாக அது எளிதில் உறிஞ்சப்பட்டு உடலின் அனைத்து பாகங்களும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன.பாலை உட்கார்ந்து குடித்தால் என்ன நிகழும்?உட்கார்ந்து பால் குடிக்கும் போது, ​​இந்த திரவத்தின் ஓட்டம் தடைப்பட்டு, உணவுக்குழாயின் கீழ் 
பகுதியில் தங்கிவிடும்.
நீண்ட காலத்துக்கு இப்படி நடந்தால், Gastroesophageal Reflux Syndrome போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது பொதுவாக GERD என்று அழைக்கப்படுகிறது.பாலை உட்கார்ந்து குடிக்க வேண்டிய நிலை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?உட்கார்ந்து பால் குடிக்க 
வேண்டிய கட்டாயம் இருந்தால், பாலை அவசர அவசரமாக குடிப்பதை தவிர்க்கவும். உங்கள் வயிற்றில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க சிறிது சிறிதாக குடிக்கவும். இப்படி செய்தால், 
வயிற்றுவலி வராது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>