வியாழன், 9 ஜூன், 2022

உங்கள் கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கும் ஊறவைத்த அரிசி

அரிசியை ஊறவைத்த நீரை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள்
 குறித்து பார்ப்போம்.
சமைப்பதற்கு அரிசியை ஊறவைத்த நீரை பெரும்பாலும் யாரும் உபயோகப்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். முடி உதிர்தல், முடி உலர்வடைதல், முடி மெலிதல், பொடுகு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் 
தீர்வு காணலாம்.
அரிசி நீரில் சேதமடைந்த தலைமுடியை சரிசெய்யும் கார்போஹைட்ரேட் இனோசிட்டால் இருப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. முடியின் வேர்களை வலுப்படுத்தும், முடியின் நீளத்தை அதிகரித்து கூந்தலை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும் அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் 
குறித்து பார்ப்போம்.
1. அரிசி நீர்-வெங்காய சாறு:
இந்த கலவை முடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தில் போலிக் அமிலம், சல்பர் மற்றும் வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. அவை முடி உடைவது, முடி மெலிவதை குறைக்கவும் உதவும்.
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் ஊற்றி அதில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அரிசியை வடிகட்டிவிட்டு அந்த நீரை மட்டும் பிரிட்ஜில் குளிர வைக்கவும். ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்
 அதனை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். பின்பு அரிசி ஊறவைத்த நீரில் வெங்காய சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு
 உச்சந்தலை உள்பட தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை 
அலசி விடலாம். வெங்காய வாசனையை போக்குவதற்கு ஷாம்பு பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. அரிசி நீர் - கிரீன் டீ:
இந்த கலவையில் கண்டிஷனிங் பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தலைமுடியை 
மென்மையாக்கும்.
செய்முறை: அரிசியை ஊறவைத்து ஒரு கப் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு கிரீன் டீ பேக்கை போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரிசி நீரை சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.
3. அரிசிநீர்-தேன்:
அரிசி நீரில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி சேதத்தை சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியவை. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியவை. தேன், கூந்தல் முடியை மென்மையாக்கக்கூடியது. முடி உடைவதையும் குறைக்கக்கூடியது.
செய்முறை: இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் 
தேன் கலந்து நன்கு கிளறவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த 
கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது. வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம்.
4. அரிசி நீர்-ஆரஞ்சு தோல்:
பொடுகு தொல்லையை போக்குவது, அதிகப்படியான எண்ணெய் தன்மையை குறைப்பது என ஆரஞ்சு தோல், தலைமுடிக்கு பல வகைகளில் நன்மை களை வழங்கக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவு வைட்டமின் சி மட்டுமின்றி, பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இந்த கலவை அரிசி நீருடன் சேர்ந்து முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். பளபளப்பான, நீண்ட மற்றும் அடர்த்தியான முடி 
வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஆரஞ்சு பழ தோலை சேர்க்கவும். ஜாடியை சூரிய ஒளி படாத இடத்திலோ, குளிர்ச்சியான இடத்திலோ வைத்துக்கொள்ளவும். இந்த நீர் கலவையை உச்சந் தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம்
 நல்ல மாற்றத்தை உணரலாம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
புதன், 1 ஜூன், 2022

பல நோய்களுக்குமான ஒரேயொரு சொட்டு மருந்து சர்வரோக நிவாரணி

நமது உடலிலுள்ள நச்சுத்தன்மைகளை நீக்கி நாம் அன்றாடம் நோய்நொடிகளின்றி சுறுசுறுப்பாக இயங்க அனைவருக்குமான ஒரேயொரு சொட்டு மருந்து ரூட் தயாரிப்புக்கள். இது ஒரு 
சர்வரோக நிவாரணி.
 நச்சு நீக்கம்: செல்கள், உடல் மற்றும் மூளை திசுக்களில் இருந்து நச்சுகளை அகற்றுவதை பாதுகாப்பாக ஆதரிக்கிறது.
வீக்கம்: பிரச்சினைகளின் மூல காரணத்தை அகற்றுவதன் மூலம் எதிர்மறை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
உறிஞ்சுதல்: ஊட்டச்சத்து பிணைப்பு தளங்களைத் தடுக்கக்கூடிய நச்சுகளை அகற்றுவதன் மூலம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை 
ஆதரிக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது: பொது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கிறது.
உள்ளடக்கம்: 1 oz.(30 mL) பாட்டில் - 600 சொட்டுகள் உள்ளன
தேவையான பொருட்கள்: உயிர் கிடைக்கும் சிலிக்கா (கிளினோப்டிலோலைட்டில் இருந்து ஆர்த்தோசிலிசிக் அமிலம்), வைட்டமின் சி மற்றும் தாதுக்கள்.
Clean Slate எடுப்பது எப்படி:
• வாய்வழியாக அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
• முதல் இரண்டு நாட்களுக்கு தினமும் இரண்டு முறை 1-2 ஒற்றை சொட்டுகளை மெதுவாகத் தொடங்குங்கள்.
• தினமும் இரண்டு முறை 3-4 சொட்டுகளாக அதிகரிக்கவும், பரிந்துரைக்கப்பட்ட டோஸ் 10 ஒற்றை சொட்டுகளை தினமும் இருமுறை அதிகரிக்கவும்.
• நச்சு நீக்கம் சங்கடமானதாக இருந்தால், மருந்தின் அளவைக் குறைக்கவும்.
* நினைவில் கொள்ளுங்கள்:  Clean Slate எடுத்துக் கொள்ளும்போது, ​​உங்களை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய
 தண்ணீர் குடிக்கவும்.
இதை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் எப்படி எடுப்பது என்பன பற்றி மேலுமொரு ஆர்டிக்கலில் விரிவாக பார்க்கலாம். 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>