செவ்வாய், 21 அக்டோபர், 2014

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்


dibavali0
உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


dibavali1
dibavali0

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிப்பது கெடுதல் என்பதற்கான 5 காரணங்கள்!!!

சாப்பிடும் போது தட்டின் அருகில் ஒரு நீள சொம்பில் தண்ணீர் வைத்திருப்பதை நாம் தினந்தோறும் காணக்கூடிய ஒரு காட்சியாகும். உணவருந்தும் போது ஒரு டம்ளர் தண்ணீர், குறிப்பாக குளிர்ந்த நீரை தன்னருகில் வைத்துக் கொள்ள பலரும் விரும்புவார்கள். ஆனால் இந்த பழக்கம் உங்கள் உடல்நலத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இங்கு உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான 5 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும்
 உங்கள் வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. 'செரிமான தீ' (ஆயுர்வேத நூல்களின் படி) என அழைக்கப்படும் இந்த செரிமான என்சைம்கள், நீங்கள் உண்ணும் உணவை உங்கள் வயிறு இறுக்கி, அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
எச்சில் அளவை குறைக்கும்
 செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். உணவை உடைப்பதற்கான என்சைம்கள் மட்டுமல்லாமல் செரிமான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். இதனால் செரிமான செயல்முறைக்கு தயாராகவும் உதவும். உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி விடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.
அசிடிட்டியை உண்டாக்கும்
 அசிடிட்டியால் அடிக்கடி பிணித்தாக்கம் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின் மீது பழியை போடலாம். தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீனத்தை அது ஏற்படுத்தும். சேச்சுரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தாது. அதன் பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும் என சோனாலி சபர்வால் கூறுகிறார். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர்பாயல் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கும்
 உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், அதிகளவில் கிளைசீமிக் உள்ள உணவுகளை உண்ணுவதை போல், உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்கும் என்று சோனாலி சபர்வால் கூறுகிறார். அதற்கு காரணம், உங்கள் உடலால் உணவை சரியாக செரிக்க வைக்க முடியவில்லை என்றால், உணவில் உள்ள குளுகோஸ் பகுதியை கொழுப்பாக மாற்றி அதனை உடலில் தேக்கி வைத்துவிடும். இதன் பின் இந்த செயல்முறை அதிக அளவிலான இன்சுலினை உங்கள் உடலில் எதிர்ப்பார்க்கும். இதனால் உடலின் ஒட்டுமொத்த இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
உடல் எடையை அதிகரிக்க செய்யும்
 உணவருந்தும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மற்றொரு பொதுவான அறிகுறி - உடல் எடை அதிகரிப்பது. ஏற்கனவே விவரித்ததை போல், இன்சுலின் அளவு அதிகரிப்பதால், உணவு உடையும் போது, அதிலுள்ள கொழுப்புகள் உடலில் தேங்கிவிடும். இதுப்போக, உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பலவீனமான செரிமான தீ என்று ஆயுர்வேதம் நம்புகிறது. இது உடலில் உள்ள வட, கபா மற்றும் பிட்டா உறுப்புகளுக்கு இடையே சமமின்மையை உருவாக்குவதோடு மட்டுமல்லாது உடல் வேலை செய்யும் முறையில் பாதிப்பை உண்டாக்கிவிடும்.
உணவில் உப்பை குறைக்கவும்
 குறைந்த அளவில் உப்பு சேர்த்த உணவை உண்ணுங்கள். உப்பு என்பது வேகமாக தாகத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். அதனால் அதனை குறைத்து கொண்டால் அது மிகவும் நல்லதாகும்.
உணவை நன்கு மென்று விழுங்கவும்
 உணவை அப்படியே விழுங்காதீர்கள்; நன்றாக மென்று உண்ணுங்கள். உணவை மென்று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளிக்கும். மேலும் செஇமான செயல்முறையை வேகமாக்க எச்சிலும் உதவும். இது போக மென்று உட்கொண்ட உணவு உடைபடுவதற்கும் உட்கிரகித்துத் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மென்று உண்ணுவதால் உள்ள மற்றொரு பயன் - எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது.
30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்கவும்
 உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடியுங்கள். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை உண்டாக்க வேண்டுமானால், உணவருந்தும் முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்க வேண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்குமாம்

செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

உடலிலேயே செரிமான மண்டலம் மிகவும் முக்கியமான உறுப்பு. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக இயங்கும். அதிலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்கும் அளவிலான உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சேர்த்து வந்தால், ஆபத்தான நோய்களான புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மேலும் செரிமான மண்டலமானது சுத்தமாக இருந்தால், அவை மூளை, பாலுறுப்புகள் மற்றும் இதர சுரப்பிகளை ஆரோக்கியமாக செயல்பட உதவும். சரி, இப்போது அத்தகைய முக்கியமான செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளைப் பார்ப்போமா!!!
தக்காளி
 தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள லைகோபைன் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
கேரட்
 கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 2 கேரட்டை உட்கொண்டு வந்தால், அவை வாழ்நாளில் 10 வருடத்தை அதிகரிக்கும். எனவே இதனை உட்கொண்டு வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
அவகேடோ
 அவகேடோவை உட்கொண்டு வந்தால், வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு, வயிற்றில் ஏதேனும் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருந்தாலும், அதனை சரிசெய்துவிடும்.
தயிர்
 தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருப்பதால், அதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து, செரிமானம் சீராக நடைபெறும்.
க்ரீன் டீ
 க்ரீன் டீயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக இருப்பதால், இவை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். குறிப்பாக க்ரீன் டீ வயிற்றில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும்.
இளநீர்
 தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பமானது தணியும். மேலும் இவை குடல் மற்றும் வயிற்றை திறம்பட செயல்படத் தூண்டும்.
பெர்ரிப் பழங்கள்
 பெர்ரிப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் இருப்பதுடன், மற்ற பழங்களை விட சர்க்கரையானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் செரிமான மண்டலத்தில் தேவையற்ற நச்சுக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.
நட்ஸ்
 தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலமானது சீராக செயல்படும்.
இஞ்சி
 இஞ்சியின் அற்புதத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எனவே முடிந்த அளவில் தினமும் உணவில் இஞ்சியை தவறாமல் சேர்த்து வாருங்கள். உங்கள் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்..
சிட்ரஸ் பழங்கள்
 சிட்ரஸ் பழங்களில் உள்ள கரையக்கூடிய ஆசிட்டுகளானது செரிமானமானது சீராக செயல்பட உதவும். மேலும் இந்த பழங்களை உட்கொண்டு வந்தால், அவை செரிமானத்தை அதிகரித்து, ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ள உதவிப் புரியும்.
பூண்டு
 பூண்டும் ஒரு அட்டகாசமான செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருள். அதிலும் இதில் அல்லிசின் என்னும் பொருள் இருப்பதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் அதிகரிக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
 சர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும், செரிமான மண்டலம் சுத்தமாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் செயல்படும்.

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

கண் பார்வை குறைபாடு நீங்க நல்லெண்ணெய் மருத்துவம்

நல்லெண்ணையில் சிறிதளவு மிளகு சேர்த்து ஒருவாரம் வெயிலில் வைத்து பின்னர் அந்த எண்ணெய்யை தலை முழுகும் முன் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கும்.

உடலை வலுவாக்கும் மாதுளை பூ

 எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு வருவது மாதுளை பழம் தான். நாம் உண்னும் மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை கொண்டுள்ளது. இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மாதுளம் பூ மிகச் சிறந்த மருந்து பொருள்.
உலர்ந்த மாதுளைப்பூவை முப்பது கிராம் எடுத்து சேகரித்து பதினைந்து கிராம் வேலம் பிசின், மூடுன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும் சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்றிமணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும். உலர்ந்த மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்தினால் உடனே குணம் தெரியும்.
உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே முறையில் கொடுக்க குணம் தெரியும். சீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து கொள்ள வேண்டும். இதனை இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.
ஆரோக்கியமான உடல் நலம் பெற விரும்புபவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து ஆரோக்கிய உடல் கிடைக்கும். சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல் காணப்படும். பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வாயுக்கள் சீற்றம் குறையும்.

கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். மாதவிலக்கு நிற்கும் காலமான மொனோபாஸ் காலத்தில்பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்கும். அதுபோல வெள்ளை படுதலும் குணமாகும்
 

மருத்துவச்செய்தி

பேரீச்சம்பழம்:
என்ன சத்து?
இரும்புசத்து மற்றும் நார்சத்து
எப்படி சாப்பிடலாம்?
பாலை நன்கு கொதிக்க வைத்து பேரீச்சம்பளத்தை அதில் கலந்து தினமும் இளம்பெண்கள், வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டும்.
என்ன பலன்?
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடலில் உள்ள ஹார்மோன்களை சரிசெய்ய உதவுகின்றது.
மாதவிடாய் பிரச்னைகளை உடைய‌ பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்..
,,,,,,,,,,,,,

தொண்டை கரகரப்பை போக்கும் மசாலா டீ :
 
 
தேவையான பொருட்கள்
 தண்ணீர் — 2கப்
கிராம்பு — 2
ஏலக்காய் — 2
மிளகு — 10
பட்டை — 1 சிறு துண்டு
 டீத்தூள் — 2 டீஸ்பூன்
 பால் — 1 1/4 கப்
 சீனி \ பனை வெல்லம் — 2 டேபிள் ஸ்பூன்
 சோம்பு — 1/2 டீஸ்பூன்
 மசாலா டீ செய்முறை
• ஒரு பாத்திரத்தில் கிராம்பு, ஏலக்காய், மிளகு, பட்டை, சோம்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
• நன்கு கொதித்தவுடன் டீத்தூளையும் போட்டு 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
• பின் பால், சீனி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு :
பால் இல்லாமலும் குடிக்கலாம் .
பனை வெல்லம் , பனை கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்தல் அவரவர் விருப்பம்..
பொதுவாக சீனி சேர்ப்பதை தவிர்க்கலாம்........

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
 
 
 புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.
 "பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.
சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.