ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

உங்கள் வரவேற்பறையில் இந்த 3 இலைகளை ஒன்றாக சேர்த்து வைத்தால் நிம்மதி

நிறைய பணம் இருக்கிறது. ஆனால், மனதில் நிம்மதி இல்லை. நிறைய நகை துணிமணிகள் உள்ளது. ஆனால் மனதில் சந்தோஷம் இல்லை. பஞ்சு மெத்தை உள்ளது. ஆனால் கண்களில் நிம்மதியான உறக்கம் இல்லை. அறுசுவையோடு விதவிதமான பதார்த்தங்களுடன் சாப்பாடு தயாராக உள்ளது. ஆனால் நிம்மதியாக சாப்பிட, நல்ல பசி இல்லை. உடலில் ஆரோக்கியம் இல்லை. ஏன் இந்த பிரச்சனைகள் எல்லாம் நமக்கு வருகிறது. நம்முடைய வாழ்க்கையில் நேர்மையும் உண்மையும் இல்லாத காரணத்தினால், கர்மவினைகள் காரணத்தினாலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாக மனிதர்களுக்கு வரத்தான் செய்யும்.
இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், உங்களிடம் உள்ள செல்வத்தை இல்லாதவர்களுக்கு கொஞ்சம் தானம் கொடுங்கள். உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். உங்களிடம் இருக்கும் அறுசுவை உணவில், ஒரு சுவை உணவையாவது ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பவனுக்கு தானமாகக் கொடுங்கள். உங்களுக்கு நன்றாக பசி எடுக்கும். தங்கம் வைரம் வைடூரியம் என்ற பெட்டி நிறைய பணம் இருந்தால் அதில் ஒரு பங்கையாவது தான தர்ம காரியத்திற்கு செலவு செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய நிம்மதி உங்களை தேடி வரும். ஒரு ஏழை பெண்ணின் திருமண செலவை 
ஏற்றுக் கொள்ளலாம்.
சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைத்தவிர மனநிம்மதிக்கு வீட்டின் சந்தோஷத்திற்கு நம்மை சுற்றி நடக்கும் கெட்ட பலன்களை அழிப்பதற்கு என்ன செய்யலாம். ரொம்ப ரொம்ப சுலபமான வழி உள்ளது. ஒரு சிறிய டம்ளர் அல்லது பவுல் எது வேண்டுமென்றாலும் 
எடுத்துக்கொள்ளுங்கள். 
அதில் நல்ல தண்ணீரை நிரப்பி விட வேண்டும். அதன் உள்ளே 2 துளசி இலை, 2 வில்வ இலை, 2 வேப்ப இலைகளைப் போட்டு இதை அப்படியே உங்கள் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். இதே போல இன்னொரு எச்சில் படாத கிண்ணத்தில் தயார் செய்து பூஜை அறையிலும்
 வைக்கலாம்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த தண்ணீரையும் உள்ளே இருக்கும் பொருட்களையும் மாற்றினால் கூட போதும். உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். நிம்மதி சந்தோஷம் தூக்கம் பசி இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.நிறைய பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்குமா என்று கேட்டால். நிச்சயமாக இல்லை, சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் மக்களுக்கு கூட இப்படிப்பட்ட பிரச்சினைகள், மன நிம்மதியற்ற சூழ்நிலையை
 கொடுக்கின்றது.
இவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இவர்கள் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. மன குழப்பத்தில் இருந்து விடுபட, வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்க, இந்த மூன்று இலைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும். இதில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் கொடுத்து
 கொண்டே இருக்கும்.
இந்த 3 இலைகளை வைத்து விட்டால் எல்லாம் முடிந்ததா? எல்லாம் சரியாகிவிடுமா? என்ற எண்ணத்தோடு மட்டும் பரிகாரத்தை செய்ய வேண்டாம். முழு நம்பிக்கையோடு மூன்று இலைகளிலும், அந்த கடவுளுக்கு சமம் என்று நம்பியவர்களுக்கு, முழுமையான நிம்மதி கிடைப்பது உறுதி. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கை இல்லாமல் பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒருபோதும் 
பலன் இருக்காது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக