வெள்ளி, 26 செப்டம்பர், 2014

மருத்துவச்செய்தி

பேரீச்சம்பழம்:
என்ன சத்து?
இரும்புசத்து மற்றும் நார்சத்து
எப்படி சாப்பிடலாம்?
பாலை நன்கு கொதிக்க வைத்து பேரீச்சம்பளத்தை அதில் கலந்து தினமும் இளம்பெண்கள், வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டும்.
என்ன பலன்?
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடலில் உள்ள ஹார்மோன்களை சரிசெய்ய உதவுகின்றது.
மாதவிடாய் பிரச்னைகளை உடைய‌ பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்..
,,,,,,,,,,,,,

தொண்டை கரகரப்பை போக்கும் மசாலா டீ :
 
 
தேவையான பொருட்கள்
 தண்ணீர் — 2கப்
கிராம்பு — 2
ஏலக்காய் — 2
மிளகு — 10
பட்டை — 1 சிறு துண்டு
 டீத்தூள் — 2 டீஸ்பூன்
 பால் — 1 1/4 கப்
 சீனி \ பனை வெல்லம் — 2 டேபிள் ஸ்பூன்
 சோம்பு — 1/2 டீஸ்பூன்
 மசாலா டீ செய்முறை
• ஒரு பாத்திரத்தில் கிராம்பு, ஏலக்காய், மிளகு, பட்டை, சோம்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
• நன்கு கொதித்தவுடன் டீத்தூளையும் போட்டு 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
• பின் பால், சீனி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு :
பால் இல்லாமலும் குடிக்கலாம் .
பனை வெல்லம் , பனை கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்தல் அவரவர் விருப்பம்..
பொதுவாக சீனி சேர்ப்பதை தவிர்க்கலாம்........

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
 
 
 புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.
 "பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.
சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக