புதன், 1 ஏப்ரல், 2026

பிறந்தநாள் வாழ்த்து திரு.துரைராஜா தியாகராஜா 01.04.2026

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா
( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2026..இன்று  இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்,மருமகள்  பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார்  மாமா மாமி பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்
, இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் நவற்கிரி ,அப்பா வயிரவர் நவற்கிரி அப்பாச்சி அம்பாள் சன்னதி முருகன் நல்லூர்க்கந்தன் புத்தூர் அம்மன்  சுவிஸ் சுப்பிரமணியர் சுவிஸ் ஸ்ரீவிஸ்ணுதுர்க்கை அம்பாள் சூரிச்சிவன்   இறை அருள் பெற்று குறையற்ற குணத்தோடும்
குறையாத அன்போடும்
குறையில்லா பண்போடும் பூ போன்ற புன்னகை
பொக்கிஷமாய் மின்னட்டும்..
உன்னை பெற்ற அன்னையரை
ஊர் போற்றி மகிழட்டும்.
மகிழ்வான தருணங்கள் மலரட்டும்
இனிமையாக.. நெகிழ்வான நேரங்கள்
நிகழட்டும் இளமையாக..
எண்ணங்களும் ஏக்கங்களும்
எல்லை தாண்டி வெல்லட்டும்..
கையிட்டு செய்பவைகள்
கையில் வந்து சேரட்டும்..
வலிமையான வரிகளால்
வாழ்த்திட தெரியவில்லை  .
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்
சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் 
இணைந்து .இவ்வுறவை
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

http://lovithan.blogspot.com/2026/04/01042026.html













 

வியாழன், 9 ஜூன், 2022

உங்கள் கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கும் ஊறவைத்த அரிசி

அரிசியை ஊறவைத்த நீரை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள்
 குறித்து பார்ப்போம்.
சமைப்பதற்கு அரிசியை ஊறவைத்த நீரை பெரும்பாலும் யாரும் உபயோகப்படுத்துவதில்லை. அதனை பயன்படுத்தி கூந்தலுக்கு பளபளப்பும், பொலிவும் சேர்க்கலாம். முடி உதிர்தல், முடி உலர்வடைதல், முடி மெலிதல், பொடுகு போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் 
தீர்வு காணலாம்.
அரிசி நீரில் சேதமடைந்த தலைமுடியை சரிசெய்யும் கார்போஹைட்ரேட் இனோசிட்டால் இருப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. முடியின் வேர்களை வலுப்படுத்தும், முடியின் நீளத்தை அதிகரித்து கூந்தலை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும் அமினோ அமிலங்களும் இதில் உள்ளன. கூந்தலுக்கு அரிசி நீரை பயன்படுத்தும் வழிமுறைகள் 
குறித்து பார்ப்போம்.
1. அரிசி நீர்-வெங்காய சாறு:
இந்த கலவை முடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும் தன்மை கொண்டது. வெங்காயத்தில் போலிக் அமிலம், சல்பர் மற்றும் வைட்டமின் சி போன்ற சக்திவாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன. அவை முடி உடைவது, முடி மெலிவதை குறைக்கவும் உதவும்.
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் ஊற்றி அதில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அரிசியை வடிகட்டிவிட்டு அந்த நீரை மட்டும் பிரிட்ஜில் குளிர வைக்கவும். ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்
 அதனை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். பின்பு அரிசி ஊறவைத்த நீரில் வெங்காய சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு
 உச்சந்தலை உள்பட தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை 
அலசி விடலாம். வெங்காய வாசனையை போக்குவதற்கு ஷாம்பு பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. அரிசி நீர் - கிரீன் டீ:
இந்த கலவையில் கண்டிஷனிங் பண்புகள் உள்ளன. அவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தலைமுடியை 
மென்மையாக்கும்.
செய்முறை: அரிசியை ஊறவைத்து ஒரு கப் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு கிரீன் டீ பேக்கை போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அதனுடன் அரிசி நீரை சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.
3. அரிசிநீர்-தேன்:
அரிசி நீரில் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை முடியின் வேர்களை வலுப்படுத்தவும், முடி சேதத்தை சரிசெய்யவும் உதவுகின்றன. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, பி மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியவை. முடியில் ஈரப்பதத்தை தக்கவைக்கக்கூடியவை. தேன், கூந்தல் முடியை மென்மையாக்கக்கூடியது. முடி உடைவதையும் குறைக்கக்கூடியது.
செய்முறை: இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் 
தேன் கலந்து நன்கு கிளறவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த 
கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது. வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம்.
4. அரிசி நீர்-ஆரஞ்சு தோல்:
பொடுகு தொல்லையை போக்குவது, அதிகப்படியான எண்ணெய் தன்மையை குறைப்பது என ஆரஞ்சு தோல், தலைமுடிக்கு பல வகைகளில் நன்மை களை வழங்கக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவு வைட்டமின் சி மட்டுமின்றி, பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இந்த கலவை அரிசி நீருடன் சேர்ந்து முடியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவும். பளபளப்பான, நீண்ட மற்றும் அடர்த்தியான முடி 
வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
செய்முறை: அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஆரஞ்சு பழ தோலை சேர்க்கவும். ஜாடியை சூரிய ஒளி படாத இடத்திலோ, குளிர்ச்சியான இடத்திலோ வைத்துக்கொள்ளவும். இந்த நீர் கலவையை உச்சந் தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம்
 நல்ல மாற்றத்தை உணரலாம்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




புதன், 1 ஜூன், 2022

பல நோய்களுக்குமான ஒரேயொரு சொட்டு மருந்து சர்வரோக நிவாரணி

நமது உடலிலுள்ள நச்சுத்தன்மைகளை நீக்கி நாம் அன்றாடம் நோய்நொடிகளின்றி சுறுசுறுப்பாக இயங்க அனைவருக்குமான ஒரேயொரு சொட்டு மருந்து ரூட் தயாரிப்புக்கள். இது ஒரு 
சர்வரோக நிவாரணி.
 நச்சு நீக்கம்: செல்கள், உடல் மற்றும் மூளை திசுக்களில் இருந்து நச்சுகளை அகற்றுவதை பாதுகாப்பாக ஆதரிக்கிறது.
வீக்கம்: பிரச்சினைகளின் மூல காரணத்தை அகற்றுவதன் மூலம் எதிர்மறை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
உறிஞ்சுதல்: ஊட்டச்சத்து பிணைப்பு தளங்களைத் தடுக்கக்கூடிய நச்சுகளை அகற்றுவதன் மூலம் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை 
ஆதரிக்கிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கிறது: பொது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கிறது.
உள்ளடக்கம்: 1 oz.(30 mL) பாட்டில் - 600 சொட்டுகள் உள்ளன
தேவையான பொருட்கள்: உயிர் கிடைக்கும் சிலிக்கா (கிளினோப்டிலோலைட்டில் இருந்து ஆர்த்தோசிலிசிக் அமிலம்), வைட்டமின் சி மற்றும் தாதுக்கள்.
Clean Slate எடுப்பது எப்படி:
• வாய்வழியாக அல்லது ஒரு கிளாஸ் தண்ணீரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
• முதல் இரண்டு நாட்களுக்கு தினமும் இரண்டு முறை 1-2 ஒற்றை சொட்டுகளை மெதுவாகத் தொடங்குங்கள்.
• தினமும் இரண்டு முறை 3-4 சொட்டுகளாக அதிகரிக்கவும், பரிந்துரைக்கப்பட்ட டோஸ் 10 ஒற்றை சொட்டுகளை தினமும் இருமுறை அதிகரிக்கவும்.
• நச்சு நீக்கம் சங்கடமானதாக இருந்தால், மருந்தின் அளவைக் குறைக்கவும்.
* நினைவில் கொள்ளுங்கள்:  Clean Slate எடுத்துக் கொள்ளும்போது, ​​உங்களை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய
 தண்ணீர் குடிக்கவும்.
இதை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் எப்படி எடுப்பது என்பன பற்றி மேலுமொரு ஆர்டிக்கலில் விரிவாக பார்க்கலாம். 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

உங்கள் வரவேற்பறையில் இந்த 3 இலைகளை ஒன்றாக சேர்த்து வைத்தால் நிம்மதி

நிறைய பணம் இருக்கிறது. ஆனால், மனதில் நிம்மதி இல்லை. நிறைய நகை துணிமணிகள் உள்ளது. ஆனால் மனதில் சந்தோஷம் இல்லை. பஞ்சு மெத்தை உள்ளது. ஆனால் கண்களில் நிம்மதியான உறக்கம் இல்லை. அறுசுவையோடு விதவிதமான பதார்த்தங்களுடன் சாப்பாடு தயாராக உள்ளது. ஆனால் நிம்மதியாக சாப்பிட, நல்ல பசி இல்லை. உடலில் ஆரோக்கியம் இல்லை. ஏன் இந்த பிரச்சனைகள் எல்லாம் நமக்கு வருகிறது. நம்முடைய வாழ்க்கையில் நேர்மையும் உண்மையும் இல்லாத காரணத்தினால், கர்மவினைகள் காரணத்தினாலும் இப்படிப்பட்ட பிரச்சினைகள் நிச்சயமாக மனிதர்களுக்கு வரத்தான் செய்யும்.
இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருந்தால், உங்களிடம் உள்ள செல்வத்தை இல்லாதவர்களுக்கு கொஞ்சம் தானம் கொடுங்கள். உங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். உங்களிடம் இருக்கும் அறுசுவை உணவில், ஒரு சுவை உணவையாவது ஒரு வேளை சாப்பிடாமல் இருப்பவனுக்கு தானமாகக் கொடுங்கள். உங்களுக்கு நன்றாக பசி எடுக்கும். தங்கம் வைரம் வைடூரியம் என்ற பெட்டி நிறைய பணம் இருந்தால் அதில் ஒரு பங்கையாவது தான தர்ம காரியத்திற்கு செலவு செய்யுங்கள். நிச்சயமாக உங்களுடைய நிம்மதி உங்களை தேடி வரும். ஒரு ஏழை பெண்ணின் திருமண செலவை 
ஏற்றுக் கொள்ளலாம்.
சரி, இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைத்தவிர மனநிம்மதிக்கு வீட்டின் சந்தோஷத்திற்கு நம்மை சுற்றி நடக்கும் கெட்ட பலன்களை அழிப்பதற்கு என்ன செய்யலாம். ரொம்ப ரொம்ப சுலபமான வழி உள்ளது. ஒரு சிறிய டம்ளர் அல்லது பவுல் எது வேண்டுமென்றாலும் 
எடுத்துக்கொள்ளுங்கள். 
அதில் நல்ல தண்ணீரை நிரப்பி விட வேண்டும். அதன் உள்ளே 2 துளசி இலை, 2 வில்வ இலை, 2 வேப்ப இலைகளைப் போட்டு இதை அப்படியே உங்கள் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். இதே போல இன்னொரு எச்சில் படாத கிண்ணத்தில் தயார் செய்து பூஜை அறையிலும்
 வைக்கலாம்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த தண்ணீரையும் உள்ளே இருக்கும் பொருட்களையும் மாற்றினால் கூட போதும். உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். நிம்மதி சந்தோஷம் தூக்கம் பசி இல்லை என்ற வார்த்தைக்கு இடமே இருக்காது.நிறைய பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இருக்குமா என்று கேட்டால். நிச்சயமாக இல்லை, சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் மக்களுக்கு கூட இப்படிப்பட்ட பிரச்சினைகள், மன நிம்மதியற்ற சூழ்நிலையை
 கொடுக்கின்றது.
இவர்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இவர்கள் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. மன குழப்பத்தில் இருந்து விடுபட, வீட்டில் சந்தோஷம் நிறைந்து இருக்க, இந்த மூன்று இலைகளையும் ஒன்றாக சேர்த்து வைத்தாலே போதும். இதில் இருந்து வெளிவரக்கூடிய நேர்மறை ஆற்றல் உங்கள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் கொடுத்து
 கொண்டே இருக்கும்.
இந்த 3 இலைகளை வைத்து விட்டால் எல்லாம் முடிந்ததா? எல்லாம் சரியாகிவிடுமா? என்ற எண்ணத்தோடு மட்டும் பரிகாரத்தை செய்ய வேண்டாம். முழு நம்பிக்கையோடு மூன்று இலைகளிலும், அந்த கடவுளுக்கு சமம் என்று நம்பியவர்களுக்கு, முழுமையான நிம்மதி கிடைப்பது உறுதி. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். நம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கை இல்லாமல் பரிகாரத்தை செய்வதன் மூலம் ஒருபோதும் 
பலன் இருக்காது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>





வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நாம் பால் குடிப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா பால் குடிக்கும் முறை இதுதான்

நமது உடலுக்கு பால் மிகவும் ஆரோக்கியமான பானமாகும். அனைவரும் கண்டிப்பாக தினமும் ஒரு டம்ளர் பாலாவது குடிக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், பாலை குடிக்க சரியான முறை என்ன? இது குறித்த பல கேள்விகள் மக்கள் மனதில் எப்போதும் இருக்கும்.பாலை
 நின்றுக்கொண்டே குடிப்பதா, அல்லது அமர்ந்துதான் குடிக்க வேண்டுமா? என்ற சந்தேகம் மக்களுக்கு வருவதுண்டு. எந்த நிலையில் பாலை குடிக்க வேண்டும்? பாலை குறிப்பிட்ட நிலையில் குடித்தால் அது
உடலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இப்படிப்பட்ட கேள்விகளின் விடைகளை இந்த பதிவில் காணலாம்.பால் ஏதற்காக குடிக்க வேண்டும்? பால் உட்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன, இதில் உள்ள கால்சியம் பற்கள் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது.பாலில்
 இருக்கும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு 
மிகவும் நல்லது.பாலில் இருக்கும் வைட்டமின் ‘D’ இயற்கைக்கு 
மாறான செல் வளர்ச்சியைத் தடுக்கிறது, இதனால் புற்றுநோய் அபாயம் குறைகிறது.பால்
குடிப்பதால், மகிழ்ச்சியுடன் தொடர்புடைய செரோடோனின் என்ற ஹார்மோனின் சுரப்பு தூண்டப்படுகிறது. இது பதற்றத்தை குறைக்கிறது.
பால் உட்கொள்வதால், உடலுக்கு இயறையான கொழுப்பு கிடைக்கிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனால்
 உடலில் தேவையற்ற கொழுப்பு அதிகரிக்காது.பாலை 
எவ்வாறு உட்கொள்ள வேண்டும்?பாலை உட்கார்ந்து குடிக்கக் 
கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் 
அமர்ந்த நிலை ஒரு ஸ்பீட்
பிரேக்கராக செயல்படுகிறது. ஆகையால், இப்படி செய்யும்போது, பால் உடலின் பல இடங்களில் மிக மெதுவாக பரவுகிறது.மாறாக நின்றுகொண்டு பால் குடிக்கும்போது, பாலுக்கு தேவையான நேரடி பாதை கிடைக்கிறது. இதன் காரணமாக அது எளிதில் உறிஞ்சப்பட்டு உடலின் அனைத்து பாகங்களும் ஊட்டச்சத்துக்களைப் பெறுகின்றன.பாலை உட்கார்ந்து குடித்தால் என்ன நிகழும்?உட்கார்ந்து பால் குடிக்கும் போது, ​​இந்த திரவத்தின் ஓட்டம் தடைப்பட்டு, உணவுக்குழாயின் கீழ் 
பகுதியில் தங்கிவிடும்.
நீண்ட காலத்துக்கு இப்படி நடந்தால், Gastroesophageal Reflux Syndrome போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது பொதுவாக GERD என்று அழைக்கப்படுகிறது.பாலை உட்கார்ந்து குடிக்க வேண்டிய நிலை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?உட்கார்ந்து பால் குடிக்க 
வேண்டிய கட்டாயம் இருந்தால், பாலை அவசர அவசரமாக குடிப்பதை தவிர்க்கவும். உங்கள் வயிற்றில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க சிறிது சிறிதாக குடிக்கவும். இப்படி செய்தால், 
வயிற்றுவலி வராது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




திங்கள், 6 செப்டம்பர், 2021

இலங்கையரால் கண்டுபிடிப்பு.சில நிமிடங்களில் கொரோனா வைரஸை அழிக்கும் இயந்திரம்

கொரோனா வைரஸை 6 – 8 நிமிடங்களில் அழிக்கும் இயந்திரம்; இலங்கையரால் கண்டுபிடிப்பு.பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக நாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக
 உள்ள கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களைக் கண்டுபிடித்துள்ளார்
காற்றிலுள்ள வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை சில நொடிகளில் அழிக்கும் அதிவேக (virus air burnable automatic machine) தானியங்கி இயந்திரம் மற்றும் பணம், ஆவணங்களில் காணப்படும் வைரஸ்கள் மற்றும் பக்டீரியாக்களை அழிக்கும் தானியங்கி கிருமித்தொற்று நீக்கிக் கருவி ஆகியவை அவரது கண்டுபிடிப்புகளில் அடங்குகின்றன.
பொரளை சுசமவர்தன மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்ற இவர், கொழும்புப் பகுதியில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றில் மோட்டார் பொறியியல் பயின்றார். பின்னர் ஜப்பான் சென்று மோட்டார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் தைக் கற்றுள்ளார்.மலேசியாவிலும் இயந்திரப் பிரிவில் இவர் பயிற்சி பெற்றுள்ளார்.
இந்த இளைஞனுக்கு இந்த இணையம் சார்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 7 மே, 2021

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

முதலாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. எண்ணும் எழுத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஒன்றாம் எண் மற்ற எல்லா எண்களுக்கும் அடிப்படையானது. ஒவ்வொருவருக்கும் 
ஒரு எண்
உண்டு. ஒன்றிலிருந்து ஒன்பது வரையிலுள்ள எண்கள் ஒவ்வொரு கிரகத்தையும் குறிக்கிறது. 1,10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண் ஆதிக்கத்திற்குரியவர்கள். ஒன்றாம் எண்ணுக்குரிய கிரகம் சூரியன் ஆவார். ஒன்றாம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள்
 A,I,J,Q,Yஆகியவை.
குண அமைப்பு 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அது போல பலருக்கும் 
நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தரும குணமும் அதிகம் இருக்கும். வீரம் நிறைந்து அமைதியுடன் தோற்றம் 
அளிப்பார்கள்.
வம்புச் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். எதிரிகளை பந்தாடும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு. தன்னம்பிக்கை அதிகம் இருக்கும் நியாயத்தை 
மிகவும் தைரியமாக எடுத்துக் கூறுவர். தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும்
 இருப்பர்.
 முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும் கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்த செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு. பெரிய தவறுகளை எளிதில் மன்னிக்கும் சுபாவம் கொண்ட இவர்கள் சிறிய தவறுகளை பெரிதாக்கி விடுவார்கள்.
தமது மனசாட்சியையே சட்டமாகக் கொண்டு நியாயவாதியாக செயல்படுவார்கள். தனக்கு இடையூறு செய்தவர்களை பந்தாடிய பிறகுதான் நிம்மதி அடைவார்கள். தனக்கு நிகரில்லாதவர்களிடம் சரிசமமாக பழக மாட்டார்கள். தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் 
கூடியவர்கள்.
இவர்களுடைய போக்கு சிலருக்கு நியாயமாக தோன்றினாலும் பலருக்கு அநியாயமாக தோன்றும். வாழ்வில் பலமுறை தேர்ற்றாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கே. இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். ஆதலால் மற்றவர்களின் தந்திரம் இவர்களிடம் பலிக்காது. எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். வயது, 
அனுபவம் உதாரண குணமும் அமையும். இவர்களிடம் வஞ்சனை சூது, முதலியவற்றை காண்பது அரிது. வெள்ளை உள்ளம்
 கொண்டு தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செவ்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு. எதிலும் சுதந்திரமாக செயல்படக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
உடல் அமைப்பு ஆரோக்கியம் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான தோற்றத்தை உடையவராக இருப்பார்கள். உடலுக்கேற்ற உயரமும், பருமனும், கனிந்த பார்வையும், உருண்டை முகமும் இருக்கும். நிமிர்ந்த நடையும், தவறு கண்ட இடத்தில் சீறிப்பாயக்கூடிய குணமும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு கண் தொடர்பான
 பலவீனம் இருக்கும்.
கண்ணாடி அணிய நேரிடும். இருதயம் சம்மந்தப்பட்ட நோய்களும், ரத்த அழுத்தம் சம்மந்தப்பட்ட நோய்களும், அஜீரண கோளாறு போன்ற நோய்களும் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு, புளிப்பு, காரம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுபவர்கள். ஆதலால் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது- உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும் உண்டாகக்கூடும் என்பதால் குளிர்ச்சியான பொருட்களை அதிகம் 
சாப்பிடுவது நல்லது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 19 அக்டோபர், 2016

முழங்கால் மற்றும் மூட்டு வலியைப் போக்க, இதோ ஒரு டம்ளர் குடிஙயுங்க !…

இன்றைய காலத்தில் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் ஏராமான மக்கள் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். உடலைத் தாங்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், நகரவோ, அசையவோ முடியாமல் பெரும் பிரச்சனையை அனுபவிக்கக்கூடும்.
அதிலும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உராய்வு நீக்கிப் பொருளின் உற்பத்தி குறைந்து, முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள தசைநார்களில் உட்காயங்கள் ஏற்பட்டு, வலிமையை இழக்கின்றன.
இப்படி வலிமையிழந்துள்ள எலும்புகள் மற்றும் தசைநார்களை வலிமைப்படுத்துவதில் உணவுகளும் பானங்களும் பெரிதும் உதவியாக இருக்கும். இங்கு ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைப் போக்கும்.
உராய்வு நீக்கி
இயற்கையாக எலும்பு மூட்டுகளில் உராய்வு நீக்கிப் பொருள் உற்பத்தி செய்யப்படும். ஆனால் வயது அதிகரிக்கும் போது அது குறையும். எனவே ஒருவருக்கு வயது அதிகமாகும் போது, எலும்புகளின் மீது சற்று அக்கறை காட்ட வேண்டும். இதனால் வயதான காலத்தில் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
நேச்சுரல் ஸ்மூத்தி
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்மூத்தி மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இந்த ஸ்மூத்தியில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உட்பொருட்கள், அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டது. இதனால் மூட்டுகளில் உள்ள உட்காயங்கள் குணமாகி, மூட்டு வலிகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
சத்துக்கள்
முக்கியமாக இந்த ஸ்மூத்தியில் வைட்டமின் சி, புரோமிலைன், சிலிகான் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் வலிமையை வழங்கி, உடலை ஆற்றலுடன் செயல்படச் செய்யும். சரி, இப்போது அந்த ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தண்ணீர் – 1 கப்
பட்டை – 1/2 டீஸ்பூன்
அன்னாசி துண்டுகள் – 2 கப்
ஓட்ஸ் – 1 கப்
ஆரஞ்சு ஜூஸ் – 1 கப்
நறுக்கிய பாதாம் – 1 டேபிள் ஸ்பூன்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
முதலில் ஓட்ஸை சுடுநீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அன்னாசிப் பழத்தை அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு தேன், பட்டைத் தூள், தண்ணீர், பாதாம், ஆரஞ்சு ஜூஸ் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் அன்னாசி சாறு மற்றும் வேக வைத்துள்ள ஓட்ஸை சேர்த்து நன்கு அரைத்து, டம்ளரில் ஊற்றி, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்துப் பருக வேண்டும்.
பருகும் முறை:
இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், 5 நாட்களில் மூட்டுகளில் இருந்த பிரச்சனையில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம். இந்த பானத்தை தொடர்ந்து 2 வாரம் குடிகுடிக்கவும் ......
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

நாம் தினமும் 5 வால் நட் சாப்பிட்டால் நடக்கும் அற்புதங்கள் தெரியுமா?


உடலை ஆரோக்கியமாக காக்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடி தேடி காய்கறிகள், பழங்களை சாப்பிடுவார்கள். அவ்வாறெனில்
 நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை இன்னும் பலப்படுத்திட நட்ஸ் சாப்பிடுகிறீர்களா? பாதாம், முந்திரி,
 வால் நட், வேர்க்கடலை ஆகியவை அற்புத சத்துக்களையும் அதிசய பண்புகளையும் கொண்டுள்ளன. அதிலும் குறிப்பாக வால் நட் சாப்பிடுவது விசேஷமானது. வால் நட் காஸ்ட்லிதான். 
ஆனால் நீங்கள் சாப்பிடும் பீஸாவை விட விலை குறைவு தினமும் 5 வால் நட் சாப்பிடுங்கள். 4 மணி நேரத்திற்கு பிறகு 
என்ன நடக்கும் தெரியுமா?
வால் நட்டின் சத்துக்கள் : முதலில் அதன் நன்மைகளை தெரிந்து கொள்வதற்கு முன் அதிலுள்ள சத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒமேகா-3, நிறைவுறா கொழுப்பு அமிலம், விட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை உள்ளன. உடலுக்கு தேவையான மிக முக்கியமான மினரல் அனைத்தும் வால்நட் கொண்டுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

மனதை கலங்க வைத்த பிறந்த குழந்தையின் முதல் அழுகை!..

குழந்தை அழுது தாய் சிரிக்கும் நெகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் அது குழந்தையின் பிறப்பு தான்.... பொதுவாக பிறந்த குழந்தையானது அழ வேண்டும் என்பார்கள் மருத்துவர்கள்.
இவ்வாறு பெற்ற குழந்தையின் அழுகையை கண்டு உச்சி குளிரும் தாயின் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இந்த உலகத்தில் ஏதும் இல்லை என்று தான் கூற வேண்டும். அவ்வாறு மகிழ்ச்சியை உருவாக்கும் குழந்தை பிறக்கும் போது பிரச்னைகள் இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா?...
இங்கு பிறந்த குழந்தை மூச்சு விடவில்லை, இதயம் இயங்க வில்லை என்ன செய்வது என்றே தெரியாமல் தவிக்கும் மருத்துவர்களின் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குழந்தை அழும் 
காட்சியே இதுவாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

இப்படித்தான் இருப்பார்களாம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் !

பிறந்த நட்சத்திரத்தின்அடிப்படையில் உங்களது பொதுகுணம்:-
அசுவினி:
செல்வந்தர் புத்திசாலி விவாதம் செய்பவர் ஆடம்பர பிரியர் பக்திமான் கல்விமான் பிறருக்கு அறிவுரை சொல்பவர்.
பரணி:
நன்றிமிக்கவர் திறமைசாலி தர்மவான் எதிரிகளை வெல்பவர் அதிர்ஷ்டசாலி சாதிப்பதில் வல்லவர் வசதியாக வாழ்பவர்.
கார்த்திகை:
பக்திமான் மென்மையானவர் செல்வந்தர் கல்வி சுமார் வாழ்க்கைத்தகுதிஅதிகம் பழகுவதில் பண்பாளர்.
ரோகிணி:
கம்பீரவான் உல்லாசப்பிரியர் கலாரசிகர் ஊர் சுற்றுபவர் செல்வாக்கு மிக்கவர் வசீகரமானவர்.
மிருகசீரிடம்:
தைரியசாலி முன்கோபி தர்மவான் புத்திசாலி திறமை மிக்கவர் செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.
திருவாதிரை:
எளிமை சாமர்த்தியசாலி திட்டமிட்டுப்பணி செய்பவர் விவாதத்தில் வல்லவர் சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.
புனர்பூசம்:
கல்விமான் சாதுர்யப் பேச்சு ஊர்சுற்றுவதில் ஆர்வம் நன்றிமிக்கவர் ஆடம்பரத்தில் நாட்டம்.
பூசம்:
பிறரை மதிப்பவர் பக்தியில் நாட்டம் வைராக்கியம் மிக்கவர் நண்பர்களை நேசிப்பவர் புகழ்மிக்கவர் மென்மையானவர்.
ஆயில்யம்:
செல்வந்தர் தர்மவான் செலவாளி ஆடம்பரப்பிரியர் சத்தியவான் நேர்மை மிக்கவர்.
மகம்:
ஆராய்ச்சி மனப்பான்மை கல்வியில் ஆர்வம் தர்மவான் பழக இனிமையானவர் நேர்மையாக நடக்க விரும்புபவர்.
பூரம்:
ஒழுக்கமானவர் புத்திசாலி விவசாயம் வியாபாரத்தில் ஆர்வம் உண்மையானவர் செல்வாக்கு பேச்சுத்திறன் மிக்கவர்.
உத்திரம்:
நாணயமானவர் பக்திமான் நட்புடன் பழகுபவர் நன்றி மறவாதவர் சுகபோகி உறவினர்களை நேசிப்பவர்.
அஸ்தம்:
ஆடை ஆபரண பிரியர் கல்வியில் ஆர்வம் கலாரசிகர் நகைச்சுவையாகப் பேசுபவர் தாய்மீது பாசம் கொண்டவர் பழக இனியவர்.
சித்திரை:
ஊர் சுற்றுவதில் ஆர்வம் கல்விமான் தைரியசாலி எதிரிமீதும் இரக்கம் சாதிப்பதில் வல்லவர் பரந்த உள்ளம் கொண்டவர்.
சுவாதி:
புத்திகூர்மையானவர் யோசித்து செயல்படுபவர் சுகபோகி பழக இனியவர் நம்பகமானவர் யோகம் மிக்கவர்.
விசாகம்:
வியாபார ஆர்வம் சாமர்த்தியசாலி கலா ரசிகர் தர்மவான் சுறுசுறுப்பானவர் தற்பெருமை கொண்டவர்.
அனுஷம்:
நேர்மையானவர் அந்தஸ்து மிக்கவர் அமைதியானவர் ஊர் சுற்றுவதில் ஆர்வம் அரசால் பாராட்டு பெறுபவர்.
கேட்டை:
துணிச்சலானவர் குறும்பு செய்வதில் வல்லவர் முன்கோபி நட்ப்பால் சாபம் பெற்றவர் சாமர்த்தியசாலி உடல் நல அக்கறை இருத்தல் நன்று.
மூலம்:
சுறுசுறுப்பானவர் கல்வியாளர் உடல்பலம்மிக்கவர் நீதிமான் புகழ்விரும்பி அடக்கமிக்கவர்.
பூராடம்:
சுகபோகி செல்வாக்குமிக்கவர் பிடிவாதக்காரர் வாக்குவாதத்தில்வல்லவர் கடமையில் ஆர்வம் கொண்டவர்.
உத்திராடம்:
தைரியசாலி கலையில் ஆர்வம் பொறுமைசாலி நினைத்ததை சாதிப்பவர் சாதுர்யமாகப் பேசுபவர்.
திருவோணம்:
பக்திமான் சமூகசேவகர் சொத்துசுகம் கொண்டவர் பிறரை மதிப்பவர் உதவுவதில் வல்லவர்.

அவிட்டம்:
கம்பீரமானவர் செல்வாக்கு மிக்கவர் தைரியசாலி முன்கோபி மனைவியை நேசிப்பவர் கடமையில் ஆர்வம் கொண்டவர்.
சதயம்:
வசீகரமானவர் செல்வந்தர் நட்புக்காக செயல்படுவார் பொறுமைசாலி முன்யோசனை கொண்டவர் திறமையாக செயல்படுபவர் ஒழுக்கமானவர்.
பூரட்டாதி:
மன திடமானவர் பலசாலி சுகபோகி பழக இனியவர் தொழிலில் ஆர்வம் மிக்கவர் குடும்பத்தை நேசிப்பவர்.
உத்திரட்டாதி:
கல்வியாளர் சாதுர்யமாகப் பேசுபவர் ஆபரணபிரியர் பக்திமான் கடமையில் ஆர்வம் மிக்கவர்.
ரேவதி:
தைரியசாலி நேர்மையானவர் எதிரியை வெல்பவர் சுகபோகத்தில் நாட்டம் தற்புகழ்ச்சி விரும்புபவர் பழக இனியவர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 26 ஜூலை, 2016

நீங்கள்தலைவலியால் அவதிப்படுபவரா இலகுவான வைத்தியம்?

1.விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை மூக்கின் வழியாக உரிஞ்ச நெஞ்சுவலி, தலைவலி முதலியன தலைவலி சரியாகும்.
2.தும்பைப்பூவின் இலையை கசக்கி அந்தச்சாறை முகர்ந்தால் தலை வலி உடனே சரியாகும்.
3.நல்லெண்ணெயில் தும்பைபூவை போட்டுக்காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
4.நல்லெண்ணெயில்
சிறிது ஜீரகத்தைப் போட்டுக் காய்ச்சி எடுக்கவும். பின்னர்
அந்த எண்ணெயை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலை
குளித்தால்,பித்தத்தால் உண்டாகும் தலை சுற்றல், தலைவலி
குணமாகும்.
5.ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு
சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப்
போட்டால் தலைவலி குணமாகும்.
6.கொதிக்க வைத்த நீரில் வேப்பம் பூவைப் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி, குணமாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 21 அக்டோபர், 2014

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்


dibavali0
உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து பரவசம் அடைவர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


dibavali1
dibavali0

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிப்பது கெடுதல் என்பதற்கான 5 காரணங்கள்!!!

சாப்பிடும் போது தட்டின் அருகில் ஒரு நீள சொம்பில் தண்ணீர் வைத்திருப்பதை நாம் தினந்தோறும் காணக்கூடிய ஒரு காட்சியாகும். உணவருந்தும் போது ஒரு டம்ளர் தண்ணீர், குறிப்பாக குளிர்ந்த நீரை தன்னருகில் வைத்துக் கொள்ள பலரும் விரும்புவார்கள். ஆனால் இந்த பழக்கம் உங்கள் உடல்நலத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். இங்கு உணவருந்தும் போது ஏன் தண்ணீர் குடிக்க கூடாது என்பதற்கான 5 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பார்த்து இனிமேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.
இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும்
 உங்கள் வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது. 'செரிமான தீ' (ஆயுர்வேத நூல்களின் படி) என அழைக்கப்படும் இந்த செரிமான என்சைம்கள், நீங்கள் உண்ணும் உணவை உங்கள் வயிறு இறுக்கி, அரைக்க உதவும். அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்ச சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
எச்சில் அளவை குறைக்கும்
 செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். உணவை உடைப்பதற்கான என்சைம்கள் மட்டுமல்லாமல் செரிமான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும். இதனால் செரிமான செயல்முறைக்கு தயாராகவும் உதவும். உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி விடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.
அசிடிட்டியை உண்டாக்கும்
 அசிடிட்டியால் அடிக்கடி பிணித்தாக்கம் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கத்தின் மீது பழியை போடலாம். தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீனத்தை அது ஏற்படுத்தும். சேச்சுரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தாது. அதன் பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் இயல்பை விட அந்த கலவை அடர்த்தியாகும் என சோனாலி சபர்வால் கூறுகிறார். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும். இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர்பாயல் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கும்
 உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், அதிகளவில் கிளைசீமிக் உள்ள உணவுகளை உண்ணுவதை போல், உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்கும் என்று சோனாலி சபர்வால் கூறுகிறார். அதற்கு காரணம், உங்கள் உடலால் உணவை சரியாக செரிக்க வைக்க முடியவில்லை என்றால், உணவில் உள்ள குளுகோஸ் பகுதியை கொழுப்பாக மாற்றி அதனை உடலில் தேக்கி வைத்துவிடும். இதன் பின் இந்த செயல்முறை அதிக அளவிலான இன்சுலினை உங்கள் உடலில் எதிர்ப்பார்க்கும். இதனால் உடலின் ஒட்டுமொத்த இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
உடல் எடையை அதிகரிக்க செய்யும்
 உணவருந்தும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மற்றொரு பொதுவான அறிகுறி - உடல் எடை அதிகரிப்பது. ஏற்கனவே விவரித்ததை போல், இன்சுலின் அளவு அதிகரிப்பதால், உணவு உடையும் போது, அதிலுள்ள கொழுப்புகள் உடலில் தேங்கிவிடும். இதுப்போக, உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பலவீனமான செரிமான தீ என்று ஆயுர்வேதம் நம்புகிறது. இது உடலில் உள்ள வட, கபா மற்றும் பிட்டா உறுப்புகளுக்கு இடையே சமமின்மையை உருவாக்குவதோடு மட்டுமல்லாது உடல் வேலை செய்யும் முறையில் பாதிப்பை உண்டாக்கிவிடும்.
உணவில் உப்பை குறைக்கவும்
 குறைந்த அளவில் உப்பு சேர்த்த உணவை உண்ணுங்கள். உப்பு என்பது வேகமாக தாகத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். அதனால் அதனை குறைத்து கொண்டால் அது மிகவும் நல்லதாகும்.
உணவை நன்கு மென்று விழுங்கவும்
 உணவை அப்படியே விழுங்காதீர்கள்; நன்றாக மென்று உண்ணுங்கள். உணவை மென்று உட்கொண்டால் அது நமக்கு பல பயன்களை அளிக்கும். மேலும் செஇமான செயல்முறையை வேகமாக்க எச்சிலும் உதவும். இது போக மென்று உட்கொண்ட உணவு உடைபடுவதற்கும் உட்கிரகித்துத் கொள்வதற்கும் சுலபமாக இருக்கும். இதனால் செரிமான அமைப்பு அதன் பணியை சிறப்பாக செய்யும். இது போக, மென்று உண்ணுவதால் உள்ள மற்றொரு பயன் - எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் தண்ணீர் குடிக்கும் எண்ணம் ஏற்படாது.
30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடிக்கவும்
 உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடியுங்கள். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை உண்டாக்க வேண்டுமானால், உணவருந்தும் முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்க வேண்டும். இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்குமாம்

செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!!!

உடலிலேயே செரிமான மண்டலம் மிகவும் முக்கியமான உறுப்பு. செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள மற்ற உறுப்புகள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக இயங்கும். அதிலும் உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு செரிமான மண்டலத்திற்கு கஷ்டத்தைக் கொடுக்கும் அளவிலான உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சேர்த்து வந்தால், ஆபத்தான நோய்களான புற்றுநோய், நீரிழிவு போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். மேலும் செரிமான மண்டலமானது சுத்தமாக இருந்தால், அவை மூளை, பாலுறுப்புகள் மற்றும் இதர சுரப்பிகளை ஆரோக்கியமாக செயல்பட உதவும். சரி, இப்போது அத்தகைய முக்கியமான செரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளைப் பார்ப்போமா!!!
தக்காளி
 தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள லைகோபைன் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
கேரட்
 கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் தினமும் 2 கேரட்டை உட்கொண்டு வந்தால், அவை வாழ்நாளில் 10 வருடத்தை அதிகரிக்கும். எனவே இதனை உட்கொண்டு வாழ்நாளை அதிகரித்துக் கொள்ளுங்கள். மேலும் இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
அவகேடோ
 அவகேடோவை உட்கொண்டு வந்தால், வயிற்றை சுத்தமாக வைத்திருக்க உதவுவதோடு, வயிற்றில் ஏதேனும் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருந்தாலும், அதனை சரிசெய்துவிடும்.
தயிர்
 தயிரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இருப்பதால், அதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து, செரிமானம் சீராக நடைபெறும்.
க்ரீன் டீ
 க்ரீன் டீயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக இருப்பதால், இவை ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும். குறிப்பாக க்ரீன் டீ வயிற்றில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும்.
இளநீர்
 தினமும் இளநீர் குடித்து வந்தால், உடல் வெப்பமானது தணியும். மேலும் இவை குடல் மற்றும் வயிற்றை திறம்பட செயல்படத் தூண்டும்.
பெர்ரிப் பழங்கள்
 பெர்ரிப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் இருப்பதுடன், மற்ற பழங்களை விட சர்க்கரையானது மிகவும் குறைவாக இருக்கும். இதனால் செரிமான மண்டலத்தில் தேவையற்ற நச்சுக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.
நட்ஸ்
 தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலமானது சீராக செயல்படும்.
இஞ்சி
 இஞ்சியின் அற்புதத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. எனவே முடிந்த அளவில் தினமும் உணவில் இஞ்சியை தவறாமல் சேர்த்து வாருங்கள். உங்கள் செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்..
சிட்ரஸ் பழங்கள்
 சிட்ரஸ் பழங்களில் உள்ள கரையக்கூடிய ஆசிட்டுகளானது செரிமானமானது சீராக செயல்பட உதவும். மேலும் இந்த பழங்களை உட்கொண்டு வந்தால், அவை செரிமானத்தை அதிகரித்து, ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ள உதவிப் புரியும்.
பூண்டு
 பூண்டும் ஒரு அட்டகாசமான செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருள். அதிலும் இதில் அல்லிசின் என்னும் பொருள் இருப்பதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் அதிகரிக்கும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
 சர்க்கரைவள்ளிக் கிழங்கிலும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும், செரிமான மண்டலம் சுத்தமாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் செயல்படும்.

உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்!!!

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். மேலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவினால் ஏற்படும் நோய் தான் அனீமியா. ஆகவே அத்தகைய இரத்த அணுக்களை அதிகப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து, உண்ணும் உணவுகளே. இரத்த அணுக்களை அதிகரிக்க அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை உண்ண வேண்டும். அத்தகைய உணவுகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

கண் பார்வை குறைபாடு நீங்க நல்லெண்ணெய் மருத்துவம்

நல்லெண்ணையில் சிறிதளவு மிளகு சேர்த்து ஒருவாரம் வெயிலில் வைத்து பின்னர் அந்த எண்ணெய்யை தலை முழுகும் முன் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கும்.

உடலை வலுவாக்கும் மாதுளை பூ

 எல்லா வகையான பூக்களுக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம்.. பொதுவாக மாதுளை என்றதும் பலருக்கு ஞாபகத்துக்கு வருவது மாதுளை பழம் தான். நாம் உண்னும் மாதுளை பழத்தில் வைட்டமின்கள், தாதுபொருட்கள் இருப்பது போல மாதுளை பூவும் சத்துகளை கொண்டுள்ளது. இரத்த மூலத்திற்கும், இரத்த பேதிக்கும் மாதுளம் பூ மிகச் சிறந்த மருந்து பொருள்.
உலர்ந்த மாதுளைப்பூவை முப்பது கிராம் எடுத்து சேகரித்து பதினைந்து கிராம் வேலம் பிசின், மூடுன்று அரிசி எடை அபின் ஆகிய மூன்றையும் சேர்த்து சூரணமாக்கி ஒரு வேளைக்கு ஆறு குன்றிமணி எடை வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம், இரத்த பேதி முதலியன குணமாகும். உலர்ந்த மாதுளை மொக்கை இடித்து தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கடுமையான இருமல் தோன்றினால் ஒரு சிட்டிகை அளவு சாப்பிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்தினால் உடனே குணம் தெரியும்.
உலர்ந்த மாதுளைப்பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி சீக்கிரமாக சரியாகிவிடும். ரத்த பேதிக்கும் இதே முறையில் கொடுக்க குணம் தெரியும். சீரகத்தோடு உலர்ந்த மாதுளைப்பூவைச் சேர்த்து மண் சட்டியில் போட்டு பொன் வறுவலாக வறுத்து கொள்ள வேண்டும். இதனை இடித்து நன்கு தூளாக்கி வஸ்திர காயம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.இந்த சூரணத்தில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் மூலவாயு மாறும் உஷ்ணத்தில் தோன்றக்கூடிய பேதியும் குணமாகும்.
ஆரோக்கியமான உடல் நலம் பெற விரும்புபவர்கள் மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து ஆரோக்கிய உடல் கிடைக்கும். சிலருக்கு வயிற்றில் வாயுக்களின் சீற்றத்தால் சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போல் காணப்படும். பசி என்பதே இவர்களுக்கு தோன்றாது. இவர்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து பனைவெல்லம் சேர்த்து அருந்தினால் வாயுக்கள் சீற்றம் குறையும்.

கருப்பை நன்கு வலுவடைய மாதுளம் பூவை கஷாயம் செய்து காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை வலுவடையும். மாதவிலக்கு நிற்கும் காலமான மொனோபாஸ் காலத்தில்பெண்களுக்கு அதிகமான மன உளைச்சல் உண்டாகும். கை, கால், இடுப்பு மூட்டுகளில் வலி உண்டாகும். இவர்கள் மாதுளம் பூவை நிழலில் காயவைத்து இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் இப்பிரச்சனை நீங்கும். அதுபோல வெள்ளை படுதலும் குணமாகும்
 

மருத்துவச்செய்தி

பேரீச்சம்பழம்:
என்ன சத்து?
இரும்புசத்து மற்றும் நார்சத்து
எப்படி சாப்பிடலாம்?
பாலை நன்கு கொதிக்க வைத்து பேரீச்சம்பளத்தை அதில் கலந்து தினமும் இளம்பெண்கள், வளரும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவேண்டும்.
என்ன பலன்?
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
உடலில் உள்ள ஹார்மோன்களை சரிசெய்ய உதவுகின்றது.
மாதவிடாய் பிரச்னைகளை உடைய‌ பெண்கள் தினமும் பாலுடன் இரண்டு பேரீச்சம்பழத்தை போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்..
,,,,,,,,,,,,,

தொண்டை கரகரப்பை போக்கும் மசாலா டீ :
 
 
தேவையான பொருட்கள்
 தண்ணீர் — 2கப்
கிராம்பு — 2
ஏலக்காய் — 2
மிளகு — 10
பட்டை — 1 சிறு துண்டு
 டீத்தூள் — 2 டீஸ்பூன்
 பால் — 1 1/4 கப்
 சீனி \ பனை வெல்லம் — 2 டேபிள் ஸ்பூன்
 சோம்பு — 1/2 டீஸ்பூன்
 மசாலா டீ செய்முறை
• ஒரு பாத்திரத்தில் கிராம்பு, ஏலக்காய், மிளகு, பட்டை, சோம்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
• நன்கு கொதித்தவுடன் டீத்தூளையும் போட்டு 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
• பின் பால், சீனி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு :
பால் இல்லாமலும் குடிக்கலாம் .
பனை வெல்லம் , பனை கற்கண்டு அல்லது கருப்பட்டி சேர்த்தல் அவரவர் விருப்பம்..
பொதுவாக சீனி சேர்ப்பதை தவிர்க்கலாம்........

புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
 
 
 புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.
 "பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.
சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.